நடமாடும் கோவில் எதுன்னு தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

வயதானவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இறைவனை கோவிலுக்கு வந்து தரிசிக்க முடியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நானே உன்னைப் பார்க்க வருகிறேன் என்று வீதியெங்கும் தேரில் பவனி வருகிறார். அதற்காகத் தான் இந்த தேரோட்டம் மாதந்தோறும்…

வயதானவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இறைவனை கோவிலுக்கு வந்து தரிசிக்க முடியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நானே உன்னைப் பார்க்க வருகிறேன் என்று வீதியெங்கும் தேரில் பவனி வருகிறார். அதற்காகத் தான் இந்த தேரோட்டம் மாதந்தோறும் ஒரு சில கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையாவது நடந்து வருகிறது.

இறைவனைப் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வருவதும் இதற்காகத்தான். தேரைப் பொருத்தவரை அது ஒரு நடமாடும் கோவில் என்றே சொல்லலாம். அதனால் தேரோட்ட நிகழ்வு சிறப்பு மிக்கதாக காணப்படுகிறது. சித்திரை திருவிழா மதுரையில் கோலாகலமாக நடக்கும். இந்த வேளையில் தேரோட்டம் அங்கு மிகவும் பிரசித்திப் பெற்றது.

மீனாட்சி அம்மன், சொக்கநாதரைத் தரிசிக்க உலகெங்கும் இருந்து பக்தர்கள் திரண்டு வருவார்கள். அந்த அற்புதமான நிகழ்வு வரும் மே 9ம் தேதி நிகழ இருக்கிறது. பக்தர்கள் திரளாக வந்து இறைவனின் தரிசனத்தைப் பெற்றுச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மே 8ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவின் போது இறைவன் திருத்தேரில் வீதி எங்கும் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தேரோடும் வீதியிலே… என்று தமிழ் சினிமாவில் ஒரு பழைய பாடல் உண்டு. அந்த வகையில் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக இருப்பது தேரோட்டமாகத் தான் இருக்கும். தேரோட்டம் என்பது வெறும் சம்பிரதாயத்துக்குத்தான் என்றும் அது ஒரு திருவிழா என்றும் பலர் எண்ணி இருக்கக்கூடும். ஆனால் இதற்குப் பின்னால் இவ்ளோ விஷயம் இருக்கு என்பதை இப்போது தெரிந்து கொண்டு இருப்பார்கள்.