ஆன்மிகத்தில் நாளும் நாளும் நாம் எத்தனையோ விசேஷங்களைச் சந்திக்கிறோம். முன்பு எல்லாம் இவ்வளவு விழிப்புணர்வு கிடையாது. கோவிலுக்குப் போவார்கள். வருவார்கள். இத்தனை விசேஷங்கள் இருந்ததா என்றால் பலருக்கும் தெரியாது. அமாவாசை, பௌர்ணமி, கடைசி வெள்ளின்னு சில தினங்கள் தான் பலருக்கும் தெரியும். இப்போது பிரதோஷம் என்ற ஒரு தினம் மக்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகி வருகிறது.
அந்தக் காலத்தில் இருந்தாலும் ஒரு சிலருக்குத் தான் இதுகுறித்து தெரியும். அப்போது மொபைல் கிடையாது. இப்போது விரல் நுனியில் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தினமும் ஏதாவது ஒரு விசேஷம் நமக்குத் தெரிய வருகிறது. அப்படித்தான் இன்று வரும் ஆன்மிக விசேஷம். என்னன்னா இன்று புதன் பிரதோஷம். அதுக்கு என்ன அவ்வளவு சிறப்பான்னு கேட்கறவங்க தொடர்ந்து படிக்கலாம்.
இன்று (6.8.2025) புதன் பிரதோஷம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்று கருதப்பட்டாலும், பிரதோஷ வழிபாடும் மிகவும் முக்கியமானது. ஆடி மாத பிரதோஷத்தில் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் வெண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்த கலவையை நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
ஆடி மாத பிரதோஷத்தன்று, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, சிவபுராணம் மற்றும் பிரதோஷ பாடல்களைப் பாடி சிவபெருமானை வழிபட்டால், அனைத்து துன்பங்களும் நீங்கி, வாழ்வில் சகல சுபிட்சங்களும் உண்டாகும் என்பது திண்ணம். புதன் பிரதோஷத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதால், செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.
திருமணமாகாதவர்கள் இந்த நாளில் விரதம் இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். புதன் கிழமை பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபட்டால், *வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி நன்மைகள் பெருகும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



