நல்லவனாத்தானே இருக்கோம்…. ஏன் இவ்ளோ கஷ்டம்? நீங்க வழிபட வேண்டிய கோவில் இதுதான்!

நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் இவ்ளோ கஷ்டப்படுகிறான்னு சொல்வதைக் கேட்டுருப்போம். அவர் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. எனக்கு ஏன்…

uvari suyambulinga swami koil

நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் இவ்ளோ கஷ்டப்படுகிறான்னு சொல்வதைக் கேட்டுருப்போம். அவர் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. எனக்கு ஏன் இவ்வளவு துன்பம்னு எல்லாம் நாம் புலம்புவதுண்டு.

அவன் அவ்வளவு அநியாயம் பண்ணுகிறான் ஆனால், அவனுக்கு என்ன குறை? நல்லா தானே இருக்கான்னும் சொல்வாங்க. இந்தக் கேள்விகள் இல்லாத மனிதர் இந்த உலகிலேயே இருக்க முடியாது. தற்போது நீங்கள் சிரமம் அனுபவித்துக் கொண்டு இருந்தால், அது போன பிறவியின் வினைப்பயனாகத் தான் இருக்க வேண்டும்.

கர்ம வினை தான் அது. உலகில் கோடிக்கணக்கில் மக்கள் உள்ளனர். அவர்களில் நமக்கு தெரிந்தவர்கள் பலர் இருந்தாலும், நெருக்கமாக ஒரு சிலரை மட்டுமே குறிப்பிடுவோம். இவற்றில் சிலரது வருகை நம் வாழ்வை குளிர வைக்கும்;. சிலரது நட்பு நம்மை தீய வழியில் நடத்திச் சென்று அழித்து விடும். உறவுகளிலும் அப்படித்தான்.

அதுபோல இந்த வாழ்வில் ஒரு சிலரிடம் நாம் அன்பாய் இருப்போம்;. ஒரு சிலரிடம் பகைமை காட்டுவோம். இன்னும் சிலரிடம் அன்பாய் இருந்து பகைமை காட்டுவோம. ;;ஒரு சிலர் நம் வாழ்வில் நுழைந்து நம் வாழ்கையையே தலைகீழாக்கிச் சென்று விடுவர்;.

ஒரு சிலர் உடைந்து போன நம் வாழ்க்கையை ஒழுங்கு பண்ணுவர். இதெல்லாம் நம் வாழ்வில் எப்படி நிகழ்கிறது? இது தான் கர்ம வினை. நம் முற்பிறவிகளின் பாவ புண்ணிய கணக்குகள் இவை. ஒருவரது பார்வையில் நன்மை என்று படுகின்ற செயல் மற்றொருவருக்கு தீமையாக படலாம். இப்பொழுது நன்மை செய்தால் அடுத்தபிறவியில் நன்மை விளையும். தீமை செய்தால் தீமை விளையும் என்றாகிவிட்டால் இதற்கு தீர்வு தான் என்ன?

இந்த சுழற்சி எப்பொழுது தான் முடியும்? இதற்கு தீர்வு, பிறவி இன்மைதான். திருக்கோயில் வழிபாடு, திருமுறை, திவ்வியப்பிரபந்தம்,  திருப்புகழ், அபிராமி அந்தாதி பாராயணம், அன்னதானம், நற்செயல் இவற்றைச் செய்து வந்தால் போதும். வினை நீக்கம் பெற்று பிறவி இன்மையை அடையலாம். கர்ம வினைகளில் இருந்து விடுபட நாம் ஈசனின் திருவடியை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

உவரியில் பரம்பொருளாய் சுயம்புலிங்க சுவாமியே அருள்பாலிக்கிறார். இங்கு கருவறை கோஷ்ட தெய்வங்களும், பிற சன்னதிகளும் ஆலயத்தில் இல்லை. அனைத்துமாய் ஆதிபரம்பொருளாய் சுயம்புலிங்க சுவாமி அருள்புரிகிறார். ஆவுடை பாகம் காணப்படாததாலும் இத்தல ஈசனை முறைப்படி வழிபட்டால் நம்மை வருத்தும் கர்ம வினைகள் அகன்று விடும் என்பது ஐதீகம். நம் வாழ்விலும், நம் சந்ததிகள் வாழ்விலும் வசந்தம் மலரும். நமது மாயப்பிறப்பை அறுக்கும் ஈசனாய் இத்தல இறைவன் நமக்கு அருள்புரிகிறார் என்கிறார்கள்.