திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா? இறையருளை இனிதே பெற இனி இந்த தவறுகளை செய்யாதீங்க..!

திருவண்ணாமலையில் கிரிவலம் 14 கிலோமீட்டர். இங்கு மலையே சிவனாக அமைந்துள்ளது. கிரிவலம் என்பது அந்த மலையைச் சுற்றி வந்து இறைவனை வழிபாடு செய்தல். கிரிவலம் என்பது இயற்கையே இறைவனாகப் பார்க்கும்போது அவருடைய அருள்சக்தியைப் பெறுவதற்குத்…

திருவண்ணாமலையில் கிரிவலம் 14 கிலோமீட்டர். இங்கு மலையே சிவனாக அமைந்துள்ளது. கிரிவலம் என்பது அந்த மலையைச் சுற்றி வந்து இறைவனை வழிபாடு செய்தல். கிரிவலம் என்பது இயற்கையே இறைவனாகப் பார்க்கும்போது அவருடைய அருள்சக்தியைப் பெறுவதற்குத் தான் மலையை சுற்றி வருகிறோம். அதில் இருந்து வெளிப்படுகின்ற ஆற்றல் சக்தியை நாம் உள்வாங்கி உடல் நோய், மனநோய் எல்லாமே நீங்கி சந்தோஷமான ஒரு வாழ்க்கை கிடைக்கும். இதற்குத் தான் கிரிவலம் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரியவங்க சொன்னாங்க.

எந்த ஊருல இருந்து இங்கு கிரிவலம் வந்தாலும் சிவனாகிய மலையைப் பார்த்ததும் செருப்பைக் கழட்டி விட்டு வெறும் காலில் நடக்கத் தொடங்குவார்கள். சிவத்தைப் பார்த்ததுக்குப் பிறகு காலில் செருப்பு போடக்கூடாது என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் வைத்து இருந்தார்கள். அப்படின்னா அவங்க எவ்வளவு உயர்வா அதை நினைத்து இருப்பார்கள்.

இன்றைக்கு அப்படியா நடக்குது? இன்றைக்கும் ஒரு சிலர் மௌனமாக சிவசிந்தனையோடு கிரிவலமாக வருபவர்கள் உள்ளார்கள். ஆனால் காதுல ஹெட்செட் மாட்டிக்கிட்டு, ஜாலியா பேசிக்கிட்டு, கண்டதையும் வாங்கித் தின்றபடி, கால் வலித்தால் மசாஜ் பண்ணிக்கொண்டு வருவது கிரிவலமா? இங்கு சிவசிந்தனை எப்படி வரும்?

இது ஜாலி டூர் அல்ல. இதுமாதிரி பல இடங்களில் இது ஒரு ட்ரக்கிங் என்றபடி ஒரு சுற்றுலாத்தலமாக நினைத்தபடி செல்கிறார்கள். கிரிவலம் போனால் அங்கு இறைவனின் தன்மையை முழுமையாக வாங்கத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் கிரிவலம் செல்வதின் நோக்கம். மலையே இறைவடிவமாக இருந்து அருளை வழங்குகிறது.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.