காசிக்கு இணையான தென்காசி… நாளை மறுநாள் கோவில் கும்பாபிஷேகம்

‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். அந்த வகையில் கோயில் நம் வாழ்க்கையோடு இரண்டற பின்னிப் பிணைந்த ஓர் அங்கமாகி விட்டது. கோவில் இருப்பதால்தான் கொஞ்சமாவது உலகில் அமைதி நிலவுகிறது. இல்லாவிட்டால் வன்முறை…

tenkasi koil

‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். அந்த வகையில் கோயில் நம் வாழ்க்கையோடு இரண்டற பின்னிப் பிணைந்த ஓர் அங்கமாகி விட்டது. கோவில் இருப்பதால்தான் கொஞ்சமாவது உலகில் அமைதி நிலவுகிறது. இல்லாவிட்டால் வன்முறை கொழுந்து விட்டு எரியும். அது சரி. இப்போது விஷயத்துக்கு வருவோம். வடக்கே காசிக்கு இணையான தலம் இங்கு தென்காசி. நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதுபற்றி பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரும், கிருபானந்த வாரியாரின் மாணவியுமான தேச மங்கையர்க்கரசி என்ன சொல்றாருன்னு பாருங்க.
நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் கோவில்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாதவனும் தினமும் கோவிலுக்குப் போனால் ஓரளவு தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வான். சாமியைப் போய்க் கும்பிட்டால் மட்டும் போதாது. நமக்குள் அப்போது என்ன நடக்கிறது என்றும் உணர வேண்டும்.

நாம் வழிபடக்கூடிய பல தலங்களில் முக்தி தலம் என்றால் அதுல ஒண்ணு காசி. சிவபெருமான் எழுந்தருளி அருள்புரியக்கூடிய காசிக்கு இணையான பல திருத்தலங்கள் தென்பகுதியில் உள்ளன. அதுல ஒண்ணுதான் தென்காசி. இதில் அம்பிகை உலகம்மையாகவும், இறைவன் காசி விஸ்வநாதராகவும் எழுந்தருளி அருள்புரிகின்றனர்.

இந்தக் கோவிலைப் பார்க்கும்போது பராக்கிரமப் பாண்டியனின் திருப்பணி நினைவுக்கு வருகிறது. அந்த அளவு அழகான திருப்பணிகளைச் செய்துள்ளார். தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 3.4.2025 அன்று முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பித்து 7.4.2025 அன்று காலை 9மணியில் இருந்து 10 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. அன்று நேரடி வர்ணனை செய்யும் வாய்ப்பை அருளி இருக்கிறார்.

இதையொட்டி சிவகாசி சிவபக்தர்கள் 50 ஆயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம் செய்கின்றனர். காசி விஸ்வநாதர் தெப்பக்குள வளாகத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சிற்றுண்டியும், 10 மணி முதல் 4 மணி வரை தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவும், மாலை 5 மணி முதல் 9 மணி வரை சிற்றுண்டியும் அன்னதானமாக நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்நன்னாளில் கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தைக் கண்டுகளித்து சிவபெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.