தை அமாவாசையன்று இதை செய்ய மறக்காதீங்க!

Published:
a854da18a4354447f05f528c2baf7af2

திங்களன்று வரும் தை அமாவாசையானது 60 வருடங்களுக்கொருமுறை வரும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாகும். ஒளி பொருந்திய சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நாள் அமாவாசைன்னு நமக்கு தெரியும்.மிகுதியான சூரிய ஒளியால் நிலவு மறைகிறது. திங்கட்கிழமையில் வரும் அமாவாசையானது பிரதட்சண அமாவாசை எனப்படும்.

33c81be0a41f0ab4ab1939236eb1a04e

திங்கள்கிழமை உதயகாலத்தில் மரங்களின் ராஜாவாக
விளங்கும் அரச மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து 108 முறை வலம் வருவது சிறந்த பலனைத் தரும். அரச மரத்தின்
அடிப்பாகம் பிரம்மா,நடு பாகம் மஹாவிஷ்ணு, உச்சி பாகம் சிவனாக பாவித்து வலம் வரவேண்டும். “பிப்பாலாத மகரிஷி” அரசமரத்தில் தோன்றி ஞானம் அருளுவார் என்பது 
இன்றைய தினத்தின் மகத்துவம்.
மரத்தை சுற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
ஓம் ஜாடினே நமஹ
ஓம் சர்மினே நமஹ
ஓம் சிகண்டினே நமஹ
ஓம் ஸர்வாங்காய நமஹ
ஓம் ஸர்வ பாவாடை நமஹ
ஓம் ஹராய நமஹ
ஓம் அரிணாக்ஷாய நமஹ
ஓம் ஸர்வ பூதாய நமஹ
ஓம் ப்ரபவே நமஹ
ஓம் ப்ரவ்ருத்தயே நமஹ
ஓம் நிவ்ருத்தயே நமஹ
ஓம் நியதாய நமஹ

திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று அரசமரத்தை சுற்றுவதால் திருமணம் கைகூடிவரும். குழந்தை பாக்கியம் கிட்டும். குறைந்தது 7 முறையும், அதிகபட்சமாக 108முறையும் வலம் வரலாம்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment