கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?

சாமி கும்பிடுவதற்கும், அதற்கும் டிக்கெட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தவும்தான் கோவில்னு சிலர் அங்கலாய்ப்பர். சாமி தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே? பிறகு எதற்குக் கோவில்னும் குதர்க்கமாக கேட்பாங்க. கோவில் எதற்காகக் கட்டினாங்க? பின்னணியில…

சாமி கும்பிடுவதற்கும், அதற்கும் டிக்கெட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தவும்தான் கோவில்னு சிலர் அங்கலாய்ப்பர். சாமி தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே? பிறகு எதற்குக் கோவில்னும் குதர்க்கமாக கேட்பாங்க. கோவில் எதற்காகக் கட்டினாங்க? பின்னணியில என்னென்ன சுவாரசியங்கள் இருக்குன்னு பார்க்கலாமா…

‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’. ‘கோவில் இல்லா ஊர் பாழ்’ என்றெல்லாம் சொல்வார்கள். கோவில்களை மன்னர்கள் கட்டினார்கள் என்றால் அவர்களது வரலாற்றைச் சொல்லும் ஒரு இடமாக கோவிலே அமைந்தது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்களின் வரலாற்றை அறிய முடிகிறது என்றால் அவர்கள் கட்டிய கோவில்கள் தான் காரணம். பல்லவர்கள் கட்டிய பல குடவரைக் கோயில்கள் இன்றும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

சிற்பிகள், ஓவியர்கள், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், பிரசாத விற்பனை செய்வோர், அரிசி, எண்ணை போன்ற மளிகை பொருள்களை விற்பனை செய்வோருக்குக் கோவில்கள் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அனைவரும் ஒற்றுமையுடன் கூடும் சந்தர்ப்பத்தை திருவிழா உண்டாக்குகிறது. திருவிழாவின் போது பல்வேறு வியாபாரிகள் பலன் அடைகின்றனர்.

கோவில்களுக்குத் தினமும் போகும்போது நான் என்ற அகந்தை அழிகிறது. மன அமைதி உண்டாகிறது. இறைவனிடம் நம் பிரச்சனையைச் சொல்லும்போது மனபாரம் குறைகிறது. கோவில்களில் திருமணம் எளிய முறையில் நடைபெறுகிறது. மாப்பிள்ளை, பொண்ணு கோவில்களில் முதல்ல சந்தித்து இருவீட்டாரும் பேசி திருமணத்தை முடிவு செய்கிறார்கள். கோவில்களில் நடக்கும் ஆன்மிக சொற்பொழிவு, நிகழ்ச்சிகளின் மூலம் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்களை அறிய முடிகிறது.

உணவுப் பஞ்சம் ஏற்படும் சமயங்களில் மக்களுக்கு உதவுவதற்காக கோவில்களில் தானியக் கிடங்குகளையும் ஏற்படுத்தி வைத்துப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் மன்னர்கள் காலத்தில் போர்கள் நடைபெற்ற போது வீரர்கள் தங்குவதற்காகவும் கோவில்கள் பயன்பட்டுள்ளன. பல கோவில்கள் மருத்துவமனைகளாக ‘ஆதுர சாலை’ என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளன.