பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என கைது செய்யப்பட்டவர் கைரேகை, அவருடைய வீட்டில் எடுக்கப்பட்ட கைரேகையுடன் சுத்தமாக பொருந்தவில்லை என்று கூறப்பட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் , ஜனவரி 16ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, அவருடைய வீட்டுக்குள் கொள்ளை அடிப்பதற்காக நுழைந்த ஒருவர் தான் கத்தியால் குத்தியதாகவும், இதில் காயமடைந்த சயீப் அலிகான் உடனடியாக ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் ஐந்து நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சயீப் அலிகான் வீட்டில் கைதான ஷரிபுல் என்பவர்தான் குற்றவாளி என முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வீட்டில் எடுக்கப்பட்ட கைரேகையுடன் அவரது கைரேகை முழுமையாக பொருந்தவில்லை என்றும், எட்டாவது மாடியில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அவரது கைரேகை கண்டறியப்பட்டதாகவும், 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டது உண்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே, கத்தியால் குத்தப்பட்ட ஒருவர் ஐந்து நாட்களில் எப்படி குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார் என்பதையும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட நபர் கத்தியால் குத்தப்படவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதால், இந்த கத்திக்குத்து சம்பவமே ஒரு நாடகமா என்ற சந்தேகம் பலரிடையே உருவாகியுள்ளது.
இதற்கு விடை விசாரணை முடிவில் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.