தமிழ் வருடப் பிறப்பை வரவேற்பது எப்படி? அதென்ன கனி காணுதல்?

தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் நாள். அந்த இனிய நாள் இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை வருகிறது. இந்த தமிழ்ப்புத்தாண்டு விசுவாவசு ஆண்டாக மலருகிறது. இன்று நாம் செய்ய வேண்டியது…

தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் நாள். அந்த இனிய நாள் இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை வருகிறது. இந்த தமிழ்ப்புத்தாண்டு விசுவாவசு ஆண்டாக மலருகிறது. இன்று நாம் செய்ய வேண்டியது என்னன்னு பார்ப்போம்.

காலை எழுந்ததும் கனி காணுதல் சிறப்பு. இது மங்களகரமான பொருள்களைப் பார்ப்பதுதான். காலையில் எழுந்ததும் நமது துணைவி, கணவன், மனைவி, குழந்தைகளைப் பார்க்கலாம். காலையில் எழுந்ததும் மனசு அமைதியாகவும், இதமான காலைப்பொழுதாகவும் இருக்கலாம். ஆண்டு முழுவதும் நல்லபடியாக இருக்கணும் என்பதற்காகத் தான் காலையில் நல்லவிதமான விஷயங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அதுக்காகத் தான் கனி காணுதலை வைத்தனர். மா, பலா, வாழை இவற்றுடன் சேர்த்து சரக்கொன்றை மலர் வைக்கலாம்.

இந்த மலர் கிடைக்கவில்லை என்றால் சாமந்திப்பூ, அல்லது மஞ்சள் நிற பூ வைக்கலாம். மல்லிகையும் வைக்கலாம். அதனுடன் சேர்த்து வெத்தலைப்பாக்கு, எலுமிச்சை, கண்ணாடி ஒண்ணு வைத்து, அதனுடன் சேர்த்து நாணயங்கள் வைக்கணும். நகையும் வைக்கலாம். இவற்றை எல்லாம் ஒரு தாம்பாலத்தில் வைத்து படுக்கை அறையில் வைக்கணும்.

காலையில் எழுந்ததுமே அதைப் பார்த்து விட்டு இந்த ஆண்டு சந்தோஷமாகவும், வெற்றிகரமாகவும் அமைய வேண்டும் என்று நமது குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும். அப்படியே பிரார்த்தனை பண்ணி விட்டு குளிக்கப் போய்விடலாம். எல்லாரும் பார்த்தாச்சுன்னா அதைக் கொண்டு போய் பூஜை அறையில் வைத்துவிட வேண்டும். அந்தப் பழங்களை நாம் சாப்பிடலாம்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரும், கிருபானந்த வாரியாரின் முதன்மை மாணவருமான தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.