இந்த மரங்கள், மாவட்டத்தில் உள்ள தனியார் நிலம் அல்லது பொதுநிலத்தில் நடப்படலாம். மரம் நட்டதற்கு ஆதாரமாக, விண்ணப்பதாரர்கள் ஜியோ-டேக் செய்யப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். மரம் நடுவது மட்டுமல்ல, நட்ட மரங்களை வளர்த்தல் மற்றும் பராமரிப்பு பொறுப்பு முழுவதுமும் அதே நபருக்கே சேரும். இந்த முயற்சியை முதன்மையாக கொண்டு வந்துள்ள மாவட்ட கலெக்டர் சந்திரப்ரகாஷ் சிங், இது தற்போதுள்ள சட்ட நிபந்தனைகளுக்கு மேலாக சேர்க்கப்படும் புதிய விதிமுறை என தெரிவித்தார்.
தனிப்பட்ட சில தேவைகளை பெறும் போது அதில் பொதுநலத்திற்கும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என கலெக்டர் சந்திரப்ரகாஷ் சிங் கூறினார்.
இந்த புதிய நடவடிக்கையை ஆதரித்த மாவட்ட தகவல் அலுவலர் பிரசாந்த் சுசாரி, இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டுமென தெரிவித்தார். “இது நிர்வாகத்தின் முயற்சியை மட்டுமல்ல, பொதுமக்களின் பொது பொறுப்பையும் வலுப்படுத்துகிறது,” என அவர் கூறினார்.