இந்த ஆண்டு ஒண்ணாம் தேதியும் சோமவாரம். கடைசி நாளான 29ம் தேதியும் சோமவாரம். அதனால் சோமவாரத்திலேயே பிறந்து சோமவாரத்திலேயே முடிகிறது இந்த கார்த்திகை மாதம். இந்த நாளில் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து நாம் நினைக்கும் விரதம்.
எதை நினைக்கிறோமோ அதைஅப்படியே நிறைவேற்றித் தரும் அற்புதமான நாள். ஏன் இந்த நாள் விசேஷம் என்றால் சிவபெருமானே இந்த நாளில் விரதம் இரு. உனக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்று மதுரையை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர்கள் பலருக்கும் சிவபெருமான் சொன்ன விரதநாள்னா அது கார்த்திகை சோமவாரம்தான்.
சிவபெருமானே குறிப்பிட்டு ஒருநாளை சொல்லி இருக்காருன்னா அந்த நாள் எவ்வளவு விசேஷம்னு பாருங்க. எனக்கெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுன்னு நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள் கூட இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நிச்சயமாக சிவபெருமானின் அருள் கிடைக்கும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வரும் சோமவார விரதநாள்கள் இவை தான். 17.11.2025, 24.11.2025, 1.12.2025, 8.12.2025, 15.12.2025 என 5 சோமவாரம் வருகிறது.
சோமவாரத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் நடக்கும். இதைக் காணக் கண்கோடி வேண்டும். இன்றே தொடங்குகிறது. இந்த மாத்தில் வரும் மகாபரணியும், கார்த்திகை மகாதீபமும் அதிவிசேஷம். அதனால் யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.
இறைவனின் அருள் பெற சிவாலயங்களுக்குச் சென்று மனதார சிவனையும், முருகனையும் வழிபட்டு உங்களுக்கு வேண்டிய வேண்டுதல்களை மனமுருக முன்வைத்து பிரார்த்தனை செய்யுங்க. உங்களுக்கு நிச்சயம் சிவன், முருகனின் அருள் கிட்டும். பரிபூரண நலன்கள் உண்டாகும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



