பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க தன் பெற்றோரை வணங்கி பயணத்தை ஆரம்பித்த நாள். குதிரைகள் பூட்டி தேரில் முருகப்பெருமானுக்கு வாயுபகவான் சாரதியாக இருக்க முருகப்பெருமானின் படைகள் அணிவகுத்துச் சென்றன.
அப்போது வழியில் ஒரு பெரிய மலை வளர்ந்து வந்தது. முருகப்பெருமானின் படைகளைத் தடுத்தது. அதைப் பற்றி நாரதர் அது கிரௌன்ஞன் என்ற அசுரனாக இருந்தது. அது எல்லாருக்கும் தீயசக்தியாக விளங்கியது. அகத்திய முனிவரின் சாபத்தால் அசையாமல் மலையாகவே நிற்கிறது. என்றாலும் இருந்த இடத்தில் இருந்தே தன்னைக் கடந்து செல்பவர்களுக்குத் தொல்லை தருகிறது.
இந்த மலைக்கு அருகில் மாயாபுரிபட்டினத்தில் சூரபத்மனின் தம்பி யானை முகம் கொண்ட தாரகாசூரன் ஆட்சி செய்கிறான். அவன் தேவர்களுக்கு ரொம்ப தொல்லைக் கொடுக்கிறான். அதைக் கேட்ட முருகப்பெருமான் படையில் பாதியை அழைச்சிட்டுப் போய் தாரகாசூரனை அழித்து வரும்படி தளபதி வீரபாகுவிடம் கட்டளை இடுகிறார். அதைக் கேட்டு வீரபாகு படையுடன் நுழைகிறார். கடும்போர். கடைசியில் முருகப்படையின் வீரனான வீரசேகரியைத் தன் கதாயுததத்தால் மார்பில் அடித்தேக் கொல்கிறான்.
இதனால் வெகுண்டு எழுந்த வீரபாகு தாரகாசூரனைக் கடுமையாகத் தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசூரன் திரிசூலத்தால் சாய்த்தான். அப்போது முருகப்பெருமானின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மறுபடியும் எழுந்து வீரபாகு கடுமையாகப் போரிட தாரகாசூரன் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாமல் எலியாக மாறி கிரௌன்ஞ மலைக்குள் போய் ஒளிந்து கொண்டான். வீரபாகுவும் மலைக்குள் நுழைய மலை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. போர்ப்படைகளும் கொல்லப்படுகின்றன.
இதை அறிந்த முருகன் தன் வேலாயுதத்தால் தாரகாசூரனைக் கொல்ல வருகிறார். அவன் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் போய் ஒளிந்து கொள்கிறான். முருகன் வேலாயுதத்தை வீசி மலையைப் பல கூறுகளாக்கினார். தாரகாசூரனும் அழித்தான். அதன்பிறகு முருகன் தெய்வாணையை மணந்தார். அந்த நாள்தான் பங்குனி உத்திரம். அந்த அற்புதமான நாள் தான் இன்று 11.4.2025 (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



