மங்களகரமான நாட்களில் பூஜை அறையில் போட வேண்டிய 3 முக்கிய கோலங்கள்…!

Published:

செவ்வாய், வெள்ளி போன்ற மங்களகரமான நாட்கள் மற்றும் கடவுளை துதிக்க வேண்டிய விசேஷமான நாட்களில் பெண்கள் பூஜை அறையை அலங்கரித்து இறைவனை வழிபாடு செய்வது என்பது வழக்கம். பூஜை அறையை சுத்தம் செய்து இறைவனின் திரு உருவப்படங்களை அலங்கரித்து விளக்கு மற்றும் இறைவனின் படங்கள் ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பின் அனைத்திற்கும் பூக்களை வைத்து பூஜை செய்வர். இந்த பூஜை அறையில் அலங்காரம், ஆராதனை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாம் இறைவனின் திருவுருவத்திற்கு முன்பு வரையும் கோலமும் தான். வாசலில் வரையக்கூடிய கோலத்தை யாரும் பூஜை அறையில் வரைவது இல்லை அதேபோன்று பூஜைக்கு என்று உள்ள சில மங்களகரமான கோலங்களை வாசலில் வரைவது இல்லை. இப்படி இறைவனை தொழுவதற்கு என்பதற்காகவே உள்ள சில முக்கிய பூஜை அறை கோலங்களை பார்க்கலாம்.

1. ஐஸ்வர்ய கோலம்:

images 5 12

ஐஸ்வர்யா கோலம் பொதுவாக வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம், அல்லது லட்சுமி பூஜை போன்ற முக்கிய நாட்களில் பூஜை அறையில் வரையப்படும் கோலம் ஆகும். பெயருக்கு ஏற்றார் போல இந்தக் கோலம் எல்லா ஐஸ்வர்யங்களையும் வழங்கக்கூடியதாக கருதப்படுகிறது. புள்ளிகளை வைத்து போடக்கூடிய இந்த கோலம் எளிமையாக வரைந்து விடலாம். லட்சுமி தேவிக்கு உகந்த இந்த ஐஸ்வர்யா கோலத்தை வரைந்து இதனை சுற்றி ஐஸ்வர்யம் என்று எழுதுவார்கள். காவிகளைக் கொண்டும் அலங்கரிப்பர். பூக்களை கொண்டு அலங்கரித்தும் விளக்கேற்றி இறைவனை வழிபடலாம்.

images 5 11

2. ஹ்ருதய கமல கோலம்:

images 5 15

தனம், தானியம், சந்தானம், ஜெயம், தைரியம், ஆயுதம், ராஜ்ஜியம் வாகனம் என அஷ்ட ஐஸ்வர்யத்தையும் வழங்கக்கூடிய கோலமாக இந்த ஹ்ருதய கமல கோலம் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் இந்தக் கோலம் போடுவதற்கு சற்றே சிரமமாக தோன்றினாலும் பழகப் பழக எளிதாகிவிடும். வெள்ளிக்கிழமை ஹ்ருதய கமல கோலத்தை பூஜை அறையில் வரைந்து இறைவனை வழிபட பண பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

3. லட்சுமி குபேர கோலம்:

images 5 13

செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் கடவுள்கள் லட்சுமி மற்றும் குபேரன். லட்சுமி குபேர கோலம் முக்கிய விசேஷ நாட்களில் வரைந்து இறைவனை வழிபட செல்வ வளம் பெருகும். வரைவதற்கு எளிமையாக இருக்கும் இந்தக் கோலம் வரங்களை அள்ளித் தரும் கோலமாக கருதப்படுகிறது.

வீட்டில் மயில் இறகு  வைத்தால் தோஷம் நீங்குமா?

ஐஸ்வர்ய கோலம், ஹ்ருதய கமல கோலம், லக்ஷ்மி குபேர கோலம் இவற்றின் ஸ்டிக்கர்களும் கடைகளில் கிடைக்கிறது ஆனால் ஸ்டிக்கர்களை வாங்கி ஓட்டுவதை விட பச்சரிசி மாவால் வரைந்து இறைவனை வழிபடுவது நல்லது. இந்தக் கோலங்களை வாசலில் வரைய வேண்டாம் இவை காலில் மிதிபடாமல் பூஜை அறையில் மட்டுமே வரைய வேண்டிய கோலங்கள். அனைத்து செல்வ வளங்களையும் வாரி வழங்கும் இந்த கோலங்களை பூஜையறையில் வரைந்து பூஜித்து சகல செல்வங்களையும் பெறுங்கள்!

மேலும் உங்களுக்காக...