பதஞ்சலி முனிவர் ஒரு யோக சித்தர். இவரை கோவில்களில் மூலவரைப் பார்க்கும் முன் நுழைவாயிலில் இருபுறமும் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவர் என இருவரும் இருப்பார்கள். நாம் இவரைப் பார்த்திருப்போம். ஆனாலும் ஏதோ ஒரு முனிவர் என நினைத்துக் கடந்து சென்று இருப்போம். இவரது சிறப்புகள் என்ன? இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்னு பார்க்கலாமா…
பதஞ்சலி சித்தர் தொன்மையான யோக சித்தர். இவர் பழம்பெரும் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பதஞ்சலி சித்தர் “யோக சூத்திரங்கள்” என்ற யோக சம்பந்தமான நூலை எழுதியவராக அறியப்படுகிறார். பதஞ்சலியின் பிறப்பிடம் மற்றும் காலம் குறித்து பல கருதுகோள்கள் உள்ளன. சிலரும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், சிதம்பரத்தைச் சுற்றிய புனிதத் திருத்தலங்களில் தவம் செய்தவர் என்றும் கூறுகின்றனர்.
இவர் நாகரூபத்தில் தோன்றியவர் என்றும், நாகம் போலவே கீழ் பகுதியில் பாம்பு வடிவம் கொண்டவராகவும், மேல் பகுதி மனித உருவமாகவும் சிலைகளில் காணப்படுகிறார். இவரது உருவம் நாக தேவராகவும், யோக தத்துவங்களின் ஆழமான விளக்கங்களை வழங்கிய ஞானியாகவும் வழிபடப்படுகிறார்.
பதஞ்சலி சித்தர் தன்னை யோக தத்துவத்தில் பாண்டித்தியம் பெற்றவராகவும் சமஸ்கிருதத்தில் “யோக சூத்திரங்கள்” எனும் நூலை எழுதியவராகவும் தமிழ் சித்த மருத்துவம், யோக, மற்றும் ஆன்மிக வழிபாடுகளில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில், பதஞ்சலி சித்தருக்கும், சித்த வியாழருக்கும் சிறப்பு இடம் உண்டு. இவரின் அருள் மூலம், யோகத்தின் மூலம் சிவத்துடன் இணையும் வழி காண முடியும் என நம்பப்படுகிறது.
பதஞ்சலி சித்தர் யோக சூத்திரங்கள் (யோகாவின் தத்துவங்களை விளக்கும் முக்கிய நூல்) நாடி ஞானம், சித்த வைத்தியம், மற்றும் அந்தர்முக தியானம் ஆகியவற்றில் முக்கிய பங்களிப்பு.ஆற்றியுள்ளார்
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



