இன்று மார்ச் 12, 2025. மாசி மகம். புனிதமான நாள். ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்கிறபோது நம் உடலால் தூய்மைப்படுத்தவும், பாவங்களை நீக்கி புண்ணியத்தை எடுத்துக் கொண்டு இறைவழிபாடு செய்யவும் புனித நீராடல் என்ற ஒன்றை பெரியவங்க அமைத்துக் கொடுத்தார்கள்.
நமது பாவத்தைப் புனித நீராடிப் போக்கிக் கொள்கிறோம். ஆனால் அந்தப் பாவத்தை ஏற்றுக் கொள்கிற நதிகள் எப்போது புனிதமாகிறது? அப்படிங்கற கேள்வி வருகிறது அல்லவா? அதற்கு விடைதான் என்ன? வாங்க பார்க்கலாம்.
ஒருமுறை நவநதிகள் என்று சொல்லக்கூடிய கங்கை, யமுனை, கோதாவரின்னு எல்லாம் பேசிக் கொண்டனவாம். ‘எல்லா மனிதர்களும் நம்மிடத்தில் நீராடுகிறார்கள். இந்தப் பாவங்களை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதற்காகத்தான் இறைவன் நம்மைப் படைத்து இருக்கிறான். ஆனால் நம்மை நாம் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டுமே… அதை எப்படிச் செய்வது?’
இதற்காக நவநதிகள் சிவபெருமானிடம் செல்கின்றன. அப்போது சிவபெருமான் சொன்ன பதில் இதுதான். ‘நான் உங்களுக்கு ஒரு நாள் தருகிறேன். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி கூடும் நாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீங்க எல்லாரும் நீராடினால் அங்கு உங்க பாவங்கள் நீங்கி உங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளலாம். அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார். அப்படி நவநதிகள் நீராடி தங்களை ஆண்டுதோறும் புனிதப்படுத்திக் கொள்ளும் அற்புதமான திருநாள்தான் இந்த மாசி மகம்.
அந்த வகையில் கும்பகோணம் மகாமகம் குளத்திலேயே பல தீர்த்தங்கள் அமைந்துள்ளன. அதனுடன் சேர்த்து இந்த நாளில் நவநதிகளும் நீராடுகின்றன. அதனால் இன்றைய நாளில் நாம் அந்தக் குளத்தில் நீராடினால் நவநதிகளில் நீராடிய பலனும், அவை பெற்ற புண்ணிய பலனும் நமக்குக் கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பேசிக் கொண்டனவாம். எல்லா மனிதர்களும் நம்மிடத்தில் நீராடுகிறார்கள். இந்தப் பாவங்களை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதற்காகத்தான் இறைவன் நம்மைப் படைத்து இருக்கிறான். ஆனால் நம்மை நாம் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டுமே… அதை எப்படிச் செய்வது? இதற்காக நவநதிகள் சிவபெருமானிடம் செல்கின்றன. அப்போது சிவபெருமான் சொன்ன பதில் இதுதான். நான் உங்களுக்கு ஒரு நாள் தருகிறேன்.
மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி கூடும் நாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீங்க எல்லாரும் நீராடினால் அங்கு உங்க பாவங்கள் நீங்கி உங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளலாம். அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அப்படி நவநதிகள் நீராடி தங்களை ஆண்டுதோறும் புனிதப்படுத்திக் கொள்ளும் அற்புதமான திருநாள்தான் இந்த மாசி மகம்.
அந்த வகையில் கும்பகோணம் மகாமகம் குளத்திலேயே பல தீர்த்தங்கள் அமைந்துள்ளன. அதனுடன் சேர்த்து இந்த நாளில் நவநதிகளும் நீராடுகின்றன. அதனால் இன்றைய நாளில் நாம் அந்தக் குளத்தில் நீராடினால் நவநதிகளில் நீராடிய பலனும், அவை பெற்ற புண்ணிய பலனும் நமக்குக் கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.