வலிய வந்து ஆட்கொள்பவனே இறைவன்….! தீயோருக்கும் அருள்புரிந்த கிருஷ்ண பரமாத்மா..!!!

By Sankar Velu

Published:

தேவர்களின் வைகறைப் பொழுது. அதிலும் பிரம்ம முகூர்த்த நேரம் தான் இந்த மார்கழி மாதம். அந்த அற்புத மாதத்தில் எல்லா நாளும் நமக்கு திருநாளே. இந்த இனிய நாளில் இன்று மார்கழி 6 (21.12.2022)
மாணிக்கவாசகர் அருளிய பாடல் இது.

Markali 6
Markali 6

ஏ பெண்ணே நேற்று என்னை எழுப்புகிறேன் என்று சொன்னாயே…அதை மறந்துட்டு தூங்குறியே…நீ எழுந்து வா…என்கிறார். இறைவன் வலிய வந்து ஆட்கொள்ளக்கூடியவர் என்பதை மாணிக்கவாசகர் அழுத்தமாக சொல்கிறார். மக்களுக்கு எது தேவை எது செய்ய வேண்டும் என்று நுட்பமான அறிவு படைத்தவர் மாணிக்கவாசகர். திருவாதவூரில் இருக்கிறார்.

மதுரையிலிருந்து முதல் அமைச்சர் பதவி இவருக்கு வருகிறது. சொக்கநாதரையும், மீனாட்சியம்மையையும் அடிக்கடி பார்க்கலாம் என்ற பேராவலில் அதை ஏற்றுக்கொண்டார். பாண்டிய மன்னன் இவரை குதிரை வாங்கிட்டு வாங்க என்கிறார். அதற்காக திருப்பெருந்துறைக்குச் செல்கிறார். இன்று அதற்கு ஆவுடையார்கோவில் என்று பெயர்.

இங்கு வந்ததும் இறைவன் குருவாக வந்து மாணிக்கவாசகருடைய தலை மேல் கால் வைக்கிறார். அவரை புகழந்து பாடல்களைப் பாடிய மாணிக்கவாசகர் அங்கேயே தான் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளைக் கொண்டு ஆலயம் எழுப்புகிறார். இவ்வாறு இறைவன் வலிய உரு காட்டி அவருக்கு அருள்புரிகிறார். பல அடியார்களின் வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை.

இன்று அதற்கு ஆவுடையார்கோவில் என்று பெயர். இங்கு வந்ததும் இறைவன் வலிய உருவத்தைக் காட்டி அவரை ஆட்கொள்கிறார்.

அதனால் தான் அவர் ஈர்த்து எனை ஆட்கொண்ட எந்தை பிரான் என மாணிக்கவாசகர் சொல்கிறார். அடுத்து அவர் கூர்த்த மெய்ஞானத்தால் உணர்வர் என்கிறார். இறைவனை உணர்வதற்கு ஞானம் வேண்டும். அதைத்தான் இந்தப் பாடலில் அவர் குறிப்பிடுகிறார்.

தூங்குறவங்களை எழுப்புவதற்காகவா இந்தப் பாட்டு என்று சந்தேகம் எழலாம். இந்த ஆன்மாவானது இறைவன் நிழலில் இருந்து மனிதனாக பிறந்து விட்டது. மறுபடியும் இந்தப் பிறவி எடுத்து எடுத்து இந்த மாயைத் துயிலில் இருந்து விடுபட வேண்டும். அதற்காக அந்த ஞானத்தை வழங்கக்கூடிய பக்குவத்தைத் தான் இந்த மார்கழி மாதத்தில் தருகிறார்கள்.

எவர் ஒருவர் இந்த இனிய காலைப்பொழுதில் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இந்த மாயைத் துயில் நீங்கி இறைவனடி சேர வாய்ப்புண்டு என்கிறார் மாணிக்கவாசகர்.

மதுரையின் முதல் அமைச்சராக இருந்தாலும் கூட நாட்டில் யுத்தம் செய்து பலத்தைப் பெருக்க நினைக்காமல் மக்கள் மத்தியில் ஞானத்தைப் பெருக்கி இறைவனை உணர வேண்டும் என்பதற்காகத் தான் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் ஆலயத்தை அமைத்து நமக்கு அருளியிருக்கிறார்.

ஆண்டாள் நாச்சியார் புள்ளும் சிலம்பினகான் என பாடலை ஆரம்பிக்கிறார்.

Thiruvembavai 6
Thiruvembavai 6

இந்தப் பாடலில் கண்ணனின் இளவயது பராக்கிரம செயல்களைப் பற்றி விலாவாரியாக நாச்சியார் பேசுகிறார். கண்ணனின் இளவயது லீலை ஆச்சரியப்படத்தக்கது. பூதகியின் இடத்தில் பால் உண்டு ஆட்கொண்டது தான் அது. கமசனுக்கு ஒரு பெரிய கவலை. இந்த குழந்தையைக் கொல்ல எத்தனையோ பேரை அனுப்புகிறோம். கொல்ல முடியவில்லையே என்ற கவலை. அதனால் தான் பூதகியை அனுப்புகிறாள்.

ஆயர்பாடிக்கு வந்த பூதகி பிள்ளைப் பால் விற்க வருகிறாள். அங்கு தான் உள்ளது நந்தகோபர் வீடு. அங்கு போய் பிள்ளைக்குப் பால் கொடு என்கின்றனர் ஊரார்.

srikrishna
srikrishna

அங்கு மாறுவேடத்தில் சென்ற பூதகி குழந்தைக்குப் பால் கொடுக்க குழந்தையை யசோதாவிடம் கேட்கிறாள். அவள் கொடுக்க மறுக்கிறார். ஆனால் அவர் கையிலிருந்து பூதகி குழந்தையைப் பிடுங்கி பால் கொடுக்க கண்ணன் அவரை சம்ஹாரம் செய்கிறார்.

தீய எண்ணத்துடன் வருபவரையும் இறைவன் மன்னித்து அருள்கிறாள். அவர்களில் பூதகியும் ஒருத்தி. அவள் கொடுமைக்காரி என்ற அளவில் அவளைக் கொன்று இருக்கலாம். ஆனால் ஒரு தாய்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அவள் பால் கொடுக்க வந்ததால் அவளுக்கு மோட்சம் கொடுத்தார்.

அப்பேர்ப்பட்ட கிருஷ்ணபராமாத்மாவை நாம் எல்லோரும் வணங்க வேண்டும்…தோழிகளே வாருங்கள் என அன்புடன் இந்தப் பாடலில் ஆண்டாள் அழைக்கிறாள்.