மனிதனாய் பிறந்தவனுக்கு தினம் ஒரு பிரச்சனை வந்துக்கொண்டேதான் இருக்கும். அதை தீர்க்க இந்த முடிவை எடுக்கலாமா?! என மனம் குழம்பி தவிக்கும். அப்படி குழம்பி தவிக்கும் மனதுக்கு நிம்மதி கிடைக்க வணங்கவேண்டிய தெய்வம் சந்திர பகவான்.
அலைகடல் அமுதந்
தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
களைவளர் திங்க ளாகிக்
கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன்
செஞ்சடைப் பிறை மயாய்
மேரு மலைவல மாக வந்த
மதியமே போற்றி போற்றி”
இந்த சந்திரபகவான் மந்திரத்தினை திங்கள் கிழமை, பௌர்ணமிகளில், நவகிரகங்கள் சந்நிதிக்குச் சென்று சந்திர பகவானுக்கு நெல்லை நிவேதனமாக வைத்து, மல்லிகைப்பூக்கள் அல்லது வெள்ளை நிற பூக்களைக் கொண்டு அர்சித்து, 3 முறை வலம்வர மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.