சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல சொல்லி இருக்கின்றன. அவற்றில் 3 கதைகளைப் பார்ப்போம்.
முதல் கதை
ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவராசிகளும் சிவனிடம் ஒடுங்கின. அண்ட ங்கள் அனைத்தும் சிறிது அசைவு கூடக் கிடையாது. அப்படியே சகலமும் ஸ்தம்பித்து நின்றன.
உயிர்களிடம் பேரன்பு கொண்ட அன்னை பார்வதி அசையாநின்ற அண்டங்கள் அசையவும், மீண்டும் உயிர்கள் இயங்கவும் வேண்டி நான்கு ஜாமங்களிலும் சிவனைக் குறித்துத் தவம் செய்தாள். அம்பிகையின் தவத்துக்கு இறங்கி சிவபெருமான் தன்னிடம் ஒடுங்கி யிருந்த சகல உலகங்களையும் மீண்டும் படைத்து உயிர்களையும் படைத்தருளினார்.
பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து, “பிரபோ. அடியேன் உங்களைப் போற்றிப் பலனடைந்த இந்த நாள் “சிவராத்திரி’ என்ற பெயர் பெற்று விளங்கி, நிறைவில் முக்தி அடைய வேண்டும்” என்று வேண்டு கிறார். சிவபெருமானும் அப்படியே நடக்க ட்டும் என்று வரம் அருளுகிறார். அந்தத் திருநாளே மகா சிவராத்திரி நாள்.
இன்னொரு கதை
பாற்கடலைக் கடைந்த போது முதலில் விஷம் தான் வெளிப்பட்டது இதைக் கண்ட தேவர்கள் அமுதம் கிடைக்கும் என்று கஷ்டப்பட்டுக் கடைந்தால் விஷ மல்லவா வருகிறது என்று பயந்து ஓடி சிவனிடம் சரணடைந்தார்கள்.
சிவபெருமானும் “நஞ்சைக் கண்டு அஞ்சாதீர்’ என்று அபயமளித்து அந்த நஞ்சினைத் தான் உண்டு தேவர்களைக் காத்தார். தேவர்களும், சிவன் அருந்திய விஷத்தால் அவர் பாதிப்புக்கு ஆளாகி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் இரவு முழுவதும் பூசித் தார்கள். தேவர்களைக் காக்க சிவபெருமான் விஷம் உண்ட அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாள்.
மற்றொரு கதை
கயிலாயத்தில் அன்னை பார்வதிக்கு ஒரு நாள் ஏதோ விளையாட்டு புத்தி. பின்பக்க மாக வந்து சிவனின் கண்களைப் பொத்தினார். அவ்வளவுதான். சகல புவனங்களும் ஒளியிழந்து இருள் சூழ்ந்தது.
அம்பிகை திடுக்கிட்டுத் தன் பிழையை உணர் ந்து சிவனைப் பிரிந்து பூலோகம் வருகிறார். தன் பிழைக்குப் பிராயச்சித்தமாக காஞ்சிபுர ம் கம்ப நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் உண்டாக்கி பூஜை செய்கிறார்.
திடீரென்று கம்பாநதியில் வெள்ளம் வர, மணல் லிங்கம் கரைந்து விடுமே என்று அஞ்சி அப்படியே சிவலிங்கத்தை ஆரத் தழுவிக் கொள்கிறாள். அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் ஏகாம்பரநாத ராக அம்பிகையை (காமாட்சி) மாமரத்தடியில் மணம் புரிந்து கொள்கிறார். அந்தத் திருநா ளே சங்கரனைக் கொண்டாடும் சிவராத்திரி என்பார்கள்.
இன்னொரு கதையிலும் பார்வதி தேவி இப்படி சிவபெருமானின் கண்களை விளை யாட்டாக மூடுகிறார். எங்கிலும் இருள் சூழ்ந்த து. உயிர்கள் அனைத்தும் வாட்டமுறுகின்றன.
ஒளி இல்லாவிட்டால் உயிர்கள் பிழைப்பதும் தழைப்பதும் எப்படி? தேவி தன் கைகளை கண்களிலிருந்து அகற்றுகிறார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து பேரொளி. ஆனால் அது நெருப்பைக் கக்கும் ஒளியல்லவா? தேவி அதைக் குளிர் ஒளியாக மாற்றி உயிர்களை உய்விக்க சிவனை வேண்டுகிறார். சிவனும் அப்படியே அருள் பாலிக்கிறார். இந்த நாளே சிவராத்திரித் திருநாள்.