இன்று மகாளய அமாவாசை…. தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்…! பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

Published:

இன்று (14.10.2023) மகாளய அமாவாசை. இன்று தவறாமல் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

இறந்தவர்களைத் திட்டினால் பிரம்மஹத்தி தோஷம் வரும். வாசல்ல கோலம் போட்டால் தெய்வங்கள் வரும். அதனால அன்றைக்கு கோலம் போட்டால் பித்ருக்கள் உள்ளே வர முடியாது. அதனால் போடக்கூடாது. அப்போது தான் மூதாதையர்கள் உள்ளே வருவார்கள். அவர்களது ஆசி கிட்டும்.

மாதவிடாய் ஆனவர்கள் பூந்திக்கொட்டையைத் தண்ணீரில் ஊற வைக்கணும். வழக்கம்போல வேப்பிலை, மஞ்சளைப் போட்ட தண்ணீரில் குளித்து விட்டு, பூந்திக்கொட்டையை ஊற வைத்த தண்ணீரையும் தலைக்கு ஊற்றிக்கொள்ளலாம். இது சர்வரோக பாவநிவாரணி.

முன்னோர்களின் ஆசி கிட்ட கண்டிப்பாக திதி கொடுக்க வேண்டும். மறைந்தவர்களின் நிராசையும், கோபமும், தாபமும் தான் நம்மைத் தாக்குகிறது. அதனால் தான் வீட்டில் ஒவ்வொரு கெடுதல்களாக வருகிறது. முன்னோர்களை ஒருபோதும் திட்டக்கூடாது. அது பிரம்மஹத்தி தோஷம். அதனால் பித்ருக்களை சாந்தி பண்ண வேண்டும்.

Tharppanam
Tharppanam

இந்த மகாளயபட்ச அமாவாசையையொட்டி 14 நாள்களும் விளக்கேற்றி முன்னோர்களை நினைத்து சாமி கும்பிட வேண்டும். நாம் நல்லா இருந்தால் தான் நம் வாரிசுகள் நல்லா இருக்கும். முன்னோர்கள் செய்த தவறையே ஒருபோதும் சுட்டிக்காட்டக்கூடாது.

கடந்த 14 நாள்களும் கும்பிட முடியாதவர்கள் இன்றாவது முன்னோர்களின் போட்டாவை எல்லாம் துடைத்து சாமி கும்பிட வேண்டும். காலை 10.45 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வழி பட வேண்டும். விளக்கேற்றி, இலை போட்டு பிடிச்ச சாப்பாட்டை படையலாக வைத்து வழிபட வேண்டும். காக்கைக்கு சாதம் வைங்க.

அன்றைய தினம் காலையில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. ஓடும் நதிகளில் தர்ப்பணம் பண்ணினால் மிகவும் நல்லது.

அகாலமான மரணம் அடைந்தவர்கள் பிரேத தோஷம், உயிர்களை வதம் செய்து கொல்வதால் பிரம்மஹத்தி தோஷம், சத்ருகளால் ஏற்படும் செய்வினை தோஷங்கள் இவற்றால் தான் தெய்வங்களை வழிபடும்போது நமது வேண்டுதல்கள் நிறைவேறாமல் போய் விடுகிறது.

crow eat
crow eat

நமது குலதெய்வத்தை நல்லநாள் அன்று வழிபடணும். குருவைப் பணிந்து வணங்க வேண்டும். பிரம்மஹத்தி தோஷத்திற்கு தகுந்த பரிகாரம் செய்ய வேண்டும். ஜீவநதிகளில் நீராடுவதும், கடலில் குளிப்பதும், பூஜைகளால் நம் வேண்டுதல் நிறைவேறும்.

மூதாதையர்களின் ஆசி இருந்தால் மட்டுமே நமது எண்ணங்கள் நிறைவேறும். குருமார்களுக்கு அனுக்கரஹம் செய்தல், கோவில்களை சுத்தம் செய்தல், பித்ருக்களை வழிபட்டு திதி கொடுத்தல் இவற்றை எல்லாம் முறைப்படி செய்தால் கஷ்ட காலத்தில் நமது துன்பங்கள் விலகும்.

 

மேலும் உங்களுக்காக...