‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான்.
இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம். அதையொட்டி முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள் குறித்துப் பார்க்கலாம்.
முருகப்பெருமானின் அழகான திருவடி ஞானமே ஆகிய சேவடி என்று சொல்லலாம். அந்த ஞானமாகிய திருவடி எங்கெல்லாம் பட்டதுன்னு அருணகிரிநாதர் 3 இடங்களைக் குறிப்பிடுகிறார். முருகப்பெருமான் தனது அழகான 2 திருவடிகளை பரஞானம், அபரஞானம் என்று சொல்லக்கூடிய அந்த 2 சேவடிகளை 3 இடங்களில் பதிவு செய்து இருக்கிறார் என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். மயில் மீது தான் முதல் திருவடி பட்டது என கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் குறிப்பிடுகிறார்.
தேவர்கள் கொண்டாடுவதால் அவர்களது தலையிலும் முருகப்பெருமானின் திருவடி பட்டதாம். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் ஏட்டிலும் திருவடி பட்டுள்ளதாம். முருகப்பெருமானின் திருவடி நலன் கிடைக்கணும்னா இதுல ஏதாவது இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். இதுல நாம கடைபிடிக்க முடிவது எது என்றால் திருப்புகழை இறுகப் பற்றுவதுதான். தினமும் படித்து அதன்படி நடந்தாலே போதும்.
முருகப்பெருமானே விரும்பி தன் திருவடியை பதித்த இடம் திருப்புகழ். அதனால் நம்பிக்கையாய், உறுதியாய் நிச்சயமாய் முருகன் தருவார் என்ற எண்ணத்தோடு படித்தால் அது உயரிய நலன்களைத் தரும் என்கிறார் அருணகிரிநாதர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



