தலைவிதியையே மாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

முருகப்பெருமானை ‘தமிழ்க்கடவுள்’ என்று அழைப்பர். வேலும், மயிலும் துணை என பக்தர்கள் உள்ளன்போடு உள்ளம் உருகி வேண்டுவர். மயில் வாகனமாக வந்தது ஏன் என்றால் அது எவ்வளவு வேகமாகப் பறந்து வருமோ அது போல…

முருகப்பெருமானை ‘தமிழ்க்கடவுள்’ என்று அழைப்பர். வேலும், மயிலும் துணை என பக்தர்கள் உள்ளன்போடு உள்ளம் உருகி வேண்டுவர். மயில் வாகனமாக வந்தது ஏன் என்றால் அது எவ்வளவு வேகமாகப் பறந்து வருமோ அது போல முருகப்பெருமானும் நாம் இக்கட்டான சூழலில் துன்பப்பட்டு அவரை வேண்டும்போது அடுத்த கணமே ஓடோடி வருவார். சரி. வாங்க அது என்ன சக்தி வாய்ந்த மந்திரம்னு பார்ப்போம்.

நம்ம வாழ்க்கையில் பல சமயம் கஷ்டங்களும், துன்பங்களும் வந்து ஸ்தம்பிக்க வச்சிடும். முருகப்பெருமான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். அவரை மனம் உருகி கூப்பிட்டால் அந்த நொடியே ஓடி வருவார் என்பது தான் அவரோட சிறப்பு. முருகனை வழிபட மந்திரங்கள் ஆயிரம் இருந்தாலும் இது தனித்துவமானது. தந்தையிடம் இருந்து மகனுக்குக் கிடைக்கிற நிகரற்ற மந்திரம்.

தந்தை சிவபெருமானிடம் இருந்து மகன் முருகப்பெருமானுக்கு அருளப்பட்டது. அது எந்த மந்திரம்னு பாருங்க. ‘ஓம் நமோ குமாராய நம‘ என்ற அந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை பூஜை அறையில் 108 தடவை உச்சரித்தால் போதும்.

விநாயகப்பெருமானை வழிபட்டதும் முருகப்பெருமானை வழிபட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். இந்த வழிபாட்டின் வெற்றி 3 விஷயங்களைச் சார்ந்தது. மந்திரத்தின் சக்தி, பூஜை முறை, இந்த இரண்டையும் இணைக்கிற நமது அசைக்க முடியாத நம்பிக்கை. இது நமக்கு கஷ்ங்கள், துன்பங்கள் நீக்கி தலைவிதியையே மாற்றும். அவ்வளவு சக்தி வாய்ந்தது.