விளக்கு ஏற்றுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா?

Published:

விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது அனைத்து மதங்களிலும் இருக்கும் ஓர் பொதுவான வழிபாட்டு முறை. விளக்கு ஏற்றி வழிபடும் போது விளக்கு ஒளிர்வதைப் போல் நம் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.

வீடுகளிலுமே தினமும் பிரம்ம முகூர்த்ததில் விளக்கேற்றி ஒரு மண்டலம் வழிபடும் போது நற்காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை. அதேபோல் விளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதால் செல்வம் கொழிக்கும் என்பதும் ஐதீகம்.

இப்படி விளக்கேற்றி வழிபடும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணெய் ஊற்றி வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதன்படி விளக்கில் பஞ்சு திரி ஏற்றி வழிபட்டால் நல்லதே நடக்கும். தாமரைத் தண்டு திரியில் தீபம்ஏற்றினால் முன்ஜென்ம பாவம் அனைத்தும் விலகும். வாழைத் தண்டில் திரியில் விளக்கு ஏற்றினால் பிதுர் சாபம் நீங்கி மனம் அமைதி ஏற்படும்.

அதேபோல் வெள்ளெருக்குப் பட்டை திரி விளக்கு நீண்ட ஆயுளையும், தொழில் விருத்தியையும் ஏற்படுத்தும். புது மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் தேவியின் அருள் கிடைக்கும். புது வெள்ளைத் துணி திரி தீபம் செய்வினை தோஷங்களை விரட்டி அடிக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள் என்ன தெரியுமா…?

மேலும் குத்து விளக்கில் ஒருமுகம் ஏற்றினால் குடும்ப வளம் பெருகும், இரண்டு முகம் ஏற்றி வழிபடும் போது குடும்ப ஒற்றுமை பெருகும். நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் கிட்டும். பஞ்ச முக தீபத்திற்கு சகல நன்மைகளும் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் மூன்று முக தீபம் ஏற்றக் கூடாது.

விநாயகருக்கு நெய் தீபமும், குலப் பெருமை காக்கும் குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, இலுப்பெண்ணை தீபமும், மகாலட்சுமிக்கு பசு நெய் தீபமும், நாராயணனுக்கு நல்லெண்ணெய் தீபமும், ருத்ரருக்கு இலுப்பெண்ணை தீபமும், பராசக்திக்கு பசு நெய், விளக்கெண்ணெய் தீபமும், மாரியம்மனுக்கு இலுப்பெண்ணை தீபமும் ஏற்றி வழிபட வேண்டும். முக்கியமாக கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை கொண்டு தீபம் ஏற்றக் கூடாது.

பசுநெய் தீபம் கிரகதோஷம் விலக்கும். ஆமணக்கு எண்ணெய் தீபத்தால் உறவினர் ஒற்றுமை உண்டாகும். வேப்பெண்ணெய் தீபம் உற்றார், உறவினர் மூலம் உதவி கிடைக்கும், நல்லெண்ணெய் தீபம் நவகிரக பீடையை விலக்கும்.

மேலும் உங்களுக்காக...