எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு… இது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்கேற்றவாறு, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலாபலன் உண்டு. நமது கர்ம வினைப்படியே நமது வாழ்வும் அமையும். எத்தனைதான் கவனமாக இருந்தாலும் நமக்கே தெரியாமல் எதாவது பாவம் செய்தாலோ அல்லது முன் ஜென்ம பாவங்களால் அல்லல்படுவோர், கீழ்க்காணும் சிவ மந்திரத்தினை தினந்தோறும் சொல்லி வந்தால் கர்மவினைகள் தீர்ந்து நற்பலன் கிடைக்கும்…
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
இந்த மந்திரத்தை திங்கட் கிழமை , மாத சிவராத்திரி, பிரதோசம் ஆகிய தினங்களில் எதாவது ஒன்றில் சிவன் கோவிலில் அமர்ந்து சொல்ல ஆரம்பித்து அன்றிலிருந்து தினமும் காலை அல்லது மாலை வேளையில் இம்மந்திரத்தினைன் சொல்லி வர நமது பாவங்கள் தீரும்…
நம்புங்கள்!! நல்லதே நடக்கும்!!