கோவிலில் மற்றவர் ஏற்றி வைத்திருக்கும் அகல் விளக்குகளிலிருந்து நாம் நம் தீபத்தினை ஏற்றலாமா?

யார் ஏற்றினாலும் தீபம் ஒன்றுதான். சுவாமி சந்நிதியில் தீபமேற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்.
ஏற்கனவே யாரோ ஏற்றி எரிந்துக்கொன்றிருக்கும் விளக்கில் எந்த தோஷமுமில்லை. அதனால், ஒருவர் ஏற்றிய விளக்கிலிருந்து நாம் விளக்கேற்றினால் அவரது பாவம் நம்மை வந்து சேர்ந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய்விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள்.