திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!

By Sankar Velu

Published:

கந்த சஷ்டியின் 7ம் நாள் நிகழ்வான இன்று (19.11.2023) திருக்கல்யாணத்தைப் பற்றிப் பார்ப்போம்.

விரதங்களிலேயே கடுமையான விரதம் கந்த சஷ்டி விரதம் தான். இதை ஆரம்பித்து முடிப்பதற்கே பெரிய கொடுப்பினை வேண்டும். முருகப்பெருமானின் அருள் இருந்தால் மட்டுமே விரதத்தை முறையாக இருந்து நிறைவு செய்ய முடியும்.

விரதம் எந்த நோக்கத்திற்காக இருந்தீர்களோ அது நிறைவு பெறுவதற்கான முழு வேண்டுதலையும் இந்த நாளில் முருகப்பெருமானிடம் வேண்ட வேண்டிய நாள். மணக்கோலத்தில் இருக்கும் முருகப்பெருமானிடம் கேட்டால் எதுவும் கிடைக்கும்.

அதனால் இன்று உள்ளம் உருகி பிரார்த்தனை பண்ணுங்க. இன்று விரதத்தை நிறைவு செய்யும்போது யாராவது இருவருக்கு அன்னதானம் பண்ணுங்க.

பூஜை முடித்து சாப்பிட உட்காரும் முன்னால் வீட்ல உள்ள பெரியவங்கக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க. உறவுகளுக்குள் யாரும் ஆசிர்வாதம் வாங்க யாரும் இல்லை என்றால் பக்கத்தில் உள்ள பெரியவர்கள், சந்நியாசிகள், குருமார்கள், கோவில் அர்ச்சகர்களிடம் இந்த வாழ்த்தைப் பெறலாம்.

விரதம் இருக்கும்போதே உடல்நலமில்லாமல் போய் விரதத்தை முழுமையாகத் தொடர முடியாமல் சிலருக்குப் போகலாம். இதனால் பாவம் எதுவும் வராது. விரதம் இருப்பதற்கு முன்பே நம் உடல் தகுதியைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தெரியாமல் சிலர் முதலில் கடினமான விரதத்தை இருந்து விடுவர்.

இடையில் முடியாமல் போனால் வருத்தப்பட வேண்டாம். முருகப்பெருமானிடம் உள்ளன்போடு என்னால என்ன முடிஞ்சதோ அதை செய்தேன். அடுத்த ஆண்டு விரதம் முழுவதும் இருப்பதற்கு எனக்கு உடல் திடகாத்திரத்தைக் கொடு என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இதனால் எந்தப் பாவமோ, விரதப்பலன்களோ கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்பட வேண்டாம். கடுமையான விரதம் இருந்தாலும் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். சூடாகத் தான் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஆற வைத்துத் தண்ணீர் குடிக்கலாம்.

sarkona theepam

மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம். சற்கோண தீபத்தில் 7 தீபமாக ஏற்றலாம். ஏற்றிய தீபத்தில் ஒரு விளக்கு அணைந்து போனாலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். மதியம் 12 மணிக்குள் நல்ல நேரம் பார்த்து தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம்.

நிறைய தண்ணீர், மோர், இளநீர் எப்பவுமே தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் விரதம் இருந்ததால் எல்லா உறுப்புகளின் இயக்கமும் இயல்புநிலைக்குத் திரும்ப இதைக் குடிப்பது அவசியம். அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் எடுப்பது அவசியம்.