தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான்.
நமக்கு எந்த ஒரு வேண்டுகோள், கோரிக்கை, பரிகாரம் என்றாலும் அதுதானே முதலில் சொல்லித் தருகிறது. அது சரி. கோவிலுக்குச் செல்வதில் தப்பில்லை. சிலர் போகிற போக்கில் சாமியை ஏனோதானோவென ஒரு முறைப்படி இல்லாமல் கும்பிட்டு விட்டுச் செல்கின்றனர். அப்படி என்றால் கோவிலுக்கு எப்படி போக வேண்டும்? சாமியை வழிபட வேண்டும்னு பார்க்கலாமா…
முக்கியமான கோவில்களுக்கு செல்லும்போது அனைவரிடமும் சொல்லாதீர்கள். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் சொல்லுங்கள். ஏனென்றால் அவர்களுடைய நேரம் நம்மை தடுத்து விடும். கோவிலுக்கு செல்லும்போது தொலைபேசியை அணைத்து விடுங்கள். நீங்கள் நல்ல மனநிலையில் இருந்தால்தான் முருகனை ஆத்மார்த்தமாக வணங்க முடியும்.
சிலருக்கு சிறு கோபம் வந்தாலும் அதைப்பற்றியே அந்த நாள் முழுவதும் நினைத்து சஞ்சலப்படுவார்கள். தீய சக்திகள் உங்கள் மனதை தான் அதிகமாகத் தாக்கும். எந்த கோவிலுக்குச் சென்றாலும் கோவிலைச் சுற்றி வாருங்கள். சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுங்கள்.
தெய்வத்தின் அதிர்வலைகள் கோவிலில் அதிகமாக இருக்கும். நம்முடைய நல்ல எண்ண அலைகள் அந்த அதிர்வலைகளில் இணையும். அந்த தெய்வம் மறுபடியுயும் உங்களை அந்தக் கோவிலுக்கு வா என்று அழைக்கும். கோவிலில் உள்ள அதிர்வலைகளை நீங்களே நன்றாக அனுபவிக்கலாம். கோவிலில் சென்று முறைப்படி சுவாமியை வழிபட்டு திரும்பினால்தான் அது உங்களுக்கு ஆத்மதிருப்தியைத் தரும்.