ஒருவன் நல்லா வாழ்ந்துட்டா போதும். அதுக்கெல்லாம் புண்ணியம் செஞ்சிருக்கணும்பான்னு சொல்வாங்க. ஆனா அதை சொல்றவங்க செய்றதுல தயங்குவாங்க. புண்ணியம்னா என்ன? அதை எப்படி எளிதில் செய்வதுன்னு பாருங்க.
நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.. புண்ணியம் செய்வதற்கு அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும். பணம் தேவையில்லை.
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம். மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள். உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னலமற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.
அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும். இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன? ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை.
எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.