தை மாதத்தில் வரும் முதல் பிரதோஷம்…! கஷ்டங்கள் நீங்க மறந்தும் இருந்து விடாதீர்கள்…!!!

By Sankar Velu

Published:

தை பிரதோஷம் இன்று (19.1.2023) அனுசரிக்கப்படுகிறது. தை மாதம் வரும் முதல் பிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாள் பிரதோஷம்.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்தப் பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் நந்தி தேவருக்கும், சிவபெருமானுக்கும் நடைபெறும் பிரதோஷ அபிஷேக ஆராதனைகளை மனம் குளிர கண்டு சிவபெருமானை வழிபட்டு வர வேண்டும். வாழ்வில் இதுவரை இருந்து வந்த துக்கங்கள் இந்த நாளில் நம்மை விட்டு நீங்கிவிடும்.

Nandhi
Nandhi

நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிவபெருமானுக்கு வில்வம் சாற்றியும் வழிபட வேண்டும். ஞானமும், யோகமும் கிடைக்கும். சுபிட்சமும் நிம்மதியும் கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான உடை உடுத்தி உணவு ஏதும் உண்ணாமல் இருக்க வேண்டும்.

இப்படி விரதமிருந்து வழிபடுவோருக்கு சிவனது அருள் நிச்சயம் கிடைக்கும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.

உண்மையான பக்தியுடன் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை நோக்கி வழிபடுகிறவங்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும். தீராத துன்பங்களும் தொலையும். வாழ்க்கையில் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இந்த பிரதோஷ அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த அளவு பொருள்களை வாங்கிக் கொடுத்து வழிபடுகையில் நல்ல பலன்களைக் காணலாம்.

பிரதோஷ பூஜையில் பச்சரிசி, வெல்லம் கலந்த நைவேத்தியத்தை நந்திபகவானுக்குப் படைத்து நெய் விளக்கு ஏற்றுவது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

இந்த இனிய தருணத்தில் காலை விரதமிருந்து மாலை சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றினால் அனைத்துப் பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். தடைப்பட்ட காரியங்கள் யாவும் கைகூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு விரைவில் கிடைக்கும்.

Abishegam
Abishegam

பால், தயிர், தேன், சந்தனம், மலர்கள், பழங்கள், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீர், எண்ணை என நம்மால் முடிந்த அளவு அபிஷேகப் பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம். சிவபெருமானைத் தரிசித்து, நந்தி தேவன், சண்டிகேஷ்வரரையும் வணங்கி வர வேண்டும்.

தை மாதம் வரும் இந்த முதல் பிரதோஷத்தில் மறக்காமல் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டு இதுநாள் வரை உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டு இருந்த துன்பங்களுக்கு விடை கொடுங்கள்.