சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: முக்கிய கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதா?

Published:

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ரயில் பணிகளுக்காக ஒரு சில கட்டிடங்கள் இடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டமாக மாதவரம் முதல் சிப்காட் வரை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 45.8 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த தடத்தில் அடையாறு மயிலாப்பூர் புரசைவாக்கம் உள்பட 50 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே சுரங்கம் தோன்றும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் இந்த மாத இறுதியில் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள அயனாவரம் பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஒரு சில கட்டிடங்கள் இடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சுரங்கம் தோண்டும் போது அந்த பகுதியில் அதிர்வுகள் ஏற்படும் என்பதால் பழைய கட்டிடங்கள் தேர்வு செய்து இடிக்கப்பட உள்ளதாகவும் அந்த மாதிரியான கட்டிடங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பழைய கட்டிடங்கள் வைத்திருக்கும் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...