இறைவனை வணங்குதல் என்பது சிலாரூபத்துக்கு பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் செய்வதோடு கோவிலை வலம் வருதலோடு நிறைவுப்பெறுகிறது. பொதுவா கோவிலை மூன்று முறை வலம் வருதல்தான் நமது வழக்கம். ஒவ்வொரு கடவுளுக்கும் இத்தனை முறைதான் வலம் வரவேண்டும் என்பது ஆகம விதி.
இனி எந்தெந்த கடவுளுக்கு எத்தனை முறை வலம் வர வேண்டுமென தெரிந்துக்கொள்வோம்!!
பிள்ளையாரை ஒரு முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.
சிவன மூன்று முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்
அம்பாள் ஐந்து முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்
பெருமாள் ஐந்து முறை வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும்.
நவகிரகத்தை ஒன்பது முறை சுற்ற வேண்டும்.
அரசமரத்தை ஏழு முறை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். அதுவும் காலை 9 மணிக்கு மேல் அரச மரத்தை சுற்றக் கூடாது காலை 9 மணிக்குமேல் அரச மரத்தை சுற்றக்கூடாது. அப்படி சுற்றினால் நமக்கு இருக்கும் ஞாபக சக்தி குறையும். ஒன்பது மணிக்குமேல் அரசமரத்தடியில் இருக்கும் கடவுளை வணங்கினாலே போதும். வலம் வரவேண்டிய அவசியமில்லை.
நவக்கிரகத்திலிருக்கும் 9 கிரகத்துக்கு தலா ஒரு சுற்று என ஒன்பது சுற்றுகள் என வலம் வருவது நமது வழக்கம். அது தவறு. பொதுவாய் 3 முறை வலம் வந்தாலே போதும். எந்த கிரகத்தின் பாதிப்பு இருக்கோ அந்த கிரகத்துக்கு எத்தனை தடவை வலம் வரவேண்டுமோ அந்த எண்ணிக்கையில் வலம் வந்தால் மட்டும் போதும்.