சிலருக்கு காரணமற்ற பயம் இருக்கும். துர்க்காதேவி அசுரனை அழித்தவள் நம் மனதில் ஏற்படும் காரணமற்ற பயத்தை நீக்குவாள். அவளின் நவதுர்க்கை மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாள் பயம் நீங்கும் என்பது உறுதி.
ஓம் சூலினி துர்க்கையே நம என நாளொன்றுக்கு ஒன்பது துர்க்கை மந்திரத்தை ஒவ்வொரு துர்க்கைக்குரிய பெயரை உச்சரித்து சொல்ல வேண்டும் இப்படி ஒரு நாளைக்கு 108 முறை சொல்ல வேண்டும்.
இப்படி சொல்வதால் நன்மை விளையும் அனைத்தும் சிறக்கும் பயம் நீங்கும்.
துர்க்கையின் ஒன்பது பெயர்கள்
1.வனதுர்க்கை
2.சூலினி துர்க்கை
3.ஜாதவேதோ துர்க்கை
4.பண்டாசுரனை எரித்த துர்க்கை
5.சாந்தி துர்க்கை
6. சபரி துர்க்கை
7.தீப துர்க்கை
8.ஆசுரி துர்க்கை
9.லவண துர்க்கை
இப்படியான பெயரை மேலே உதாரணமாக சொல்லி இருக்கும் மந்திரத்தில் இந்த பெயர்களை ஒவ்வொரு நாளும் ஓம் வன துர்க்கையே நம என ஒரு நாளும், ஓம் சூலினி துர்க்கையே நம என ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ஒரு துர்க்கையின் பெயரைசொல்லி வழிபடவேண்டும்.