புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கலாமா

By Staff

Published:

ஆங்கில புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கும் நிகழ்வு சில வருடங்களாக அதிக அளவில் உள்ளது. சில பெருங்கோவில்கள் இப்படியாக திறக்கப்பட்டு இரவு நேரங்களில் பூஜை செய்யப்படுகிறது.

a1dfa967ddde0fe9e51fd9a5dc9121bf

ஹிந்து தர்ம ஆன்மிக நெறிமுறைகளின்படி, ஆகம விதிகளின்படி சிவராத்திரிக்கும், வைகுண்ட ஏகாதசிக்கும் மட்டுமே இரவு நேரத்தில் கோவில் திறந்திருக்க வேண்டும் பூஜைகள் நடைபெற வேண்டும் என்பது விதி.

இரவு பள்ளியறை பூஜை செய்து கோவில் நடை சாற்றிய பிறகு அதிகாலை திறப்பதுதான் நல்ல விசயம்.

நள்ளிரவில் தீவிர ஆன்மீகப் பயிற்சி செய்வது குடும்ப வாழ்க்கை நடத்துபவற்கு ஏற்றதல்ல. இத‌ன் கார‌ண‌மாக‌வே கோவில்க‌ள் இர‌வில் மூட‌ப்ப‌டுகின்ற‌ன‌.

நம் ஹிந்து தர்ம அடிப்படையில் அனைத்துமே சூரிய உதயத்துக்கு பின்னர்தான் என்றாலும் அதிகாலை வேளையான பிரம்ம முகூர்த்ததில் நடை திறந்தாலும் தவறில்லை. இருந்தாலும் நள்ளிரவில் நடை திறக்க கூடாது.

இப்போதைய காலத்தில் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. புத்தாண்டுக்கு கோவில் சென்று வழிபாடு செய்பவர்கள் அதிகாலையில் குளித்து விட்டு கோவிலுக்கு செல்வதே நலம் பயக்கும்.

Leave a Comment