நவகிரகத்தை எப்படி வணங்கனும்?!

Published:

abe662e2e0a56121d09ce24ad4417968

முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி, இறுதியாகதான் நவகிரக வழிபாட்டை முடிக்கனும். இதுவே ஆகம விதியாகும்.
மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.

நவகிரங்களில் எந்தெந்த தெய்வத்தை வணங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரிஞ்சுக்கலாம்..

1 . சூரியன் – ஆரோக்கியம்

2. சந்திரன் – புகழ்

3. செவ்வாய் – செல்வச் செழிப்பு

4. புதன் – அறிவு வளர்ச்சி

5. வியாழன் – மதிப்பு

6. சுக்கிரன் – வசீகரத் தன்மை

7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை

8. ராகு – தைரியம்

9. கேது – பாரம்பரியப் பெருமை 

நவகிரகங்களை ஆதித்யாய சோமாய மங்களாய குரு சுக்ர சனிவச்ய
ராகவே கேதவே நமோ நமஹ !எனச்சொல்லி மூன்றுமுறை சுற்றி வந்தாலே போதும். அவரவர் கிரகநிலையை பொறுத்து, அந்த மூற்று சுற்றுக்களோடு சூரியன் – 10 சுற்றுகள் சுக்கிரன் – 6 சுற்றுகள் சந்திரன் – 11 சுற்றுகள் சனி – 8 சுற்றுகள் செவ்வாய் – 9 சுற்றுகள் ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம் புதன் – 5, 12, 23 சுற்றுகள் கேது – 9 சுற்றுகள் வியாழன் – 3, 12, 21 சுற்றுகள் நகிரகங்களை நேருக்கு நேராக நின்று வணங்குவது தவறான ஒன்றாகும். விக்கரகங்களை தொட்டு வணங்குவது பாவம் தரும் செயல் ஆகும். எனவே அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment