பிரம்மமுகூர்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா…?

Published:

அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணியில் வரை உள்ள நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என கூறுவர். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் இந்து மதத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தொழில் தொடங்குதல், வீடு கிரகப்பிரவேசம், ஹோமம் போன்றவை இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த பிரம்ம முகூர்த்த வேலையில் தான் நான்முகனான பிரம்மன் தனது நாவினில் சரஸ்வதியை அமர வைத்து கலைகளையும் மனிதர்களையும் படைப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நேரத்தில் தேவர்,தேவதைகள், சிவன், பார்வதி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு, ரிஷிகள், முனிவர்கள் போன்றோர்கள் வான்வெளியில் வந்து மக்களுக்கு ஆசி வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

அதனால் இந்நேரத்தில் விளக்கேற்றி மனதார நாம் வேண்டுதல்களை வைத்து வழிபாடு செய்தால் அது உடனே நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு திதி, வார, தோஷ, கெட்ட நேரங்கள் எதுவுமே கிடையாது. பிரம்ம முகூர்த்த நேரம் என்றாலே நல்ல நேரம்தான். அதனாலதான் இந்த நேரத்தில் பெரும்பாலும் கணபதி ஹோமம் நடத்துவது வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்றவற்றை நடத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் காலையில் எழுந்து குளித்துவிட்டு விளக்கேற்றி அனைத்து கடவுள்களையும் நினைத்து வழிபட்டால் அதற்கான பலன் பன்மடங்காக கிடைக்கும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். சங்கடங்கள் விலகி பணவரவு, நற்காரியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

அறிவியல் ரீதியாக பார்க்கப் போனாலும் கூட பிரம்ம முகூர்த்த வேலையில் தான் வளிமண்டத்தில் சுத்தமான காற்று பரவுவதாகவும் அது நம் உடலில் படும் போது நாம் சுவாசிக்கும் போது உடலில் பலவித நோய்களிலிருந்து பாதிப்படையாமல் தடுக்கும் எனவும் நம் ஆரோக்கியம் மேம்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தால் உடல் வலிமை பெறும். ஆதலால் இந்த சிறப்பான பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து வாழ்வை வளமாக்குங்கள்.

மேலும் உங்களுக்காக...