படிப்பில் நாட்டமே இல்லாமல் உங்க பசங்க இருக்காங்களா? நாளைக்கே இதைச் செய்யுங்க..!

By Sankar Velu

Published:

ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவற்குள் அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. பிள்ளைகளுக்குப் படிப்பது என்றாலே வேப்பங்காயாக கசக்கத் தான் செய்யும்.

ஆனால் அவர்கள் பின்னாளில் நல்ல வேலையைப் பெற்று உயர்நிலையை அடையும்போது தான் படிப்பின் அருமை தெரியவரும். சில வீடுகளில் உள்ள குழந்தைகள் படிப்பே எனக்கு வரலன்னு பெற்றோர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு. வாங்க என்னன்னு பார்ப்போம்.

2024ல் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் ஆடி பௌர்ணமி, ஆடி தபசு, குரு பூர்ணிமா மற்றும் ஹயக்ரீவர் வழிபாடு என எல்லாவற்றையும் பார்ப்போம்.

இந்த ஆண்டு ஆடி மாதம் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. அதிலும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான நாளாக நாளை (21.07.2024) மலர்கிறது.

முதல் நாளே பௌர்ணமியுடன் வருகிறது. ஆடி பௌர்ணமி என்றாலே அன்று ஆடித்தபசும் வந்துவிடும். சங்கரன் கோவிலில் அம்பாள் தன்னுடைய அற்புதமான தவத்தை நிறைவேற்றியதன் பலனாக இறைவன் சங்கர நாராயணர் ஆகக் காட்சி கொடுத்த நாள் தான் இந்த ஆடித்தபசு திருவிழா.

பௌர்ணமி சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் விசேஷமானது. சிவபெருமானுக்கு எப்படி கிரிவலம் போய் வழிபடுகிறோமோ, அதே போல அம்பாளுக்கும் கோவில்களில் சிறப்பான பூஜைகள் நடக்கும். இது ரெண்டும் ஒரே நாளான ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை வருகிறது.

Hayakreevar
Hayakreevar

சத்தியநாராயண பூஜையைப் பெருமாளுக்காக செய்தாலும் இந்த முதல் ஞாயிற்றுக்கிழமையில் செய்வது உத்தமம். அன்று ஹயக்ரீவரை வழிபட வேண்டிய நாள். குழந்தைகள் நல்லா படிப்பதற்கும், நல்ல ஞானம் கிடைக்கவும் இந்த வழிபாடு அவசியம். அவருக்கும் இன்று விசேஷமான நாள்.

இந்த ஞாயிற்றுக்கிழமையில் நீங்கள் தொடர்ந்து என்ன பூஜையில் கலந்து கொள்வீர்களோ அதை முதலில் செய்யுங்கள். ஹயக்ரீவர் மகாலட்சுமியுடன் இணைந்தவாறு படம் இருந்தால் நல்லது. குழந்தைகளுக்கு ஹயக்ரீவர் மந்திரத்தைச் சொல்ல வைங்க. படிப்பில் நாட்டம் இல்லாத பசங்களைக் கொண்ட பெற்றோர்கள் இந்த நாளை மறக்காம வழிபடுங்க.

அவரவர் பிள்ளைகளுக்கு மந்திரம் சொல்லிக்கொடுத்து அவர்களையும் சொல்ல வைங்க. இதைக் காலையில் செய்வது நல்லது. அந்த வகையில் ஹயக்ரீவர் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் என இரு மந்திரங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் இணையதளத்த்தில் இருந்து எடுத்துப் படிக்கலாம்.

நமக்கெல்லாம் எதுக்கு ஞானம் என்று தேமே என்று இருந்து விடாதீர்கள். எல்லாருக்குமே ஞானம் தேவை தான். அது இருக்கும்போது தான் நாம் வாழ்க்கையில் ஒரு நிறைநிலையை அடைய முடியும் என்பதை மறந்து விடாதீர்கள். அது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.