டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.. முக்கிய அறிவிப்பு..!

Published:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி அதாவது நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேற்று அவசர அவசரமாக விண்ணப்பித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு  விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசில் உள்ள அரசு பணிகளில் காலியாக உள்ள இடத்தை நிரப்புவதற்கு குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளில் 507 காலியிடங்கள் மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் 1820 காலியிடங்கள் என மொத்தம் 2307 காலியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய முதல் நிலை தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று  தான் கடைசி நாள் என்ற நிலையில் நேற்று மைக்ரோசாப்ட் பிரச்சனை காரணமாக கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்திய நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ  ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பித்து அதற்கான கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று இரவு வரை இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைனில்  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...