பொதுவாக ஆடிமாதம் என்றாலே அது அம்பிகை வழிபாட்டுக்குரிய மாதம் தான். அதே நேரம் அம்பிகையே வழிபாட்டுக்கு தேர்வு செய்த மாதமும் இதுதான்.
அம்பாள் சிவபெருமானையும், நாராயணரையும் ஒரு சேர தரிசனம் செய்யணும்னு கேட்டு தவம் இருக்கிறாங்க. இந்த நாளில் சிவபெருமான், நாராயணர், அம்பிகை என 3 தெய்வங்களின் அருள் ஒரு சேர நமக்குக் கிடைக்கிறது.
ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இந்த 3 தெய்வங்களின் அனுக்கிரகமும் கண்டிப்பாக நமக்குத் தேவை. சிவபெருமான் நமக்கு வாழ்க்கையில் வரக்கூடிய எல்லா இன்னல்களையும் நீக்கக்கூடியவர். நம்மைக் காக்கும் கடவுளாகிய நாராயணர் நமக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வாரி வழங்குகிறார்.
இல்லாததையும் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய சக்தியாக அம்பாள் விளங்குகிறாள். அதனால் இந்த நாளில் நாம் அம்பிகை, நாராயணர், சிவபெருமான் என 3 தெய்வங்களையும் வழிபட்டு அருளைப் பெறுவோம். அதனால் தான் இந்த ஆடித்தபசுக்கு இவ்வளவு விசேஷம்.
சங்கரன் கோவிலில் ஆடித்தபசு வழிபாடு மிகவும் விசேஷமானது. இந்தக் கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. வீட்டுக்கு அடிக்கடி பாம்பு வந்துக்கிட்டே இருக்கு. என்னென்ன செய்து பார்த்தாலும் பாம்பு வருவதை நிறுத்தவே முடியலன்னு கவலைப்படுபவர்களுக்கு சங்கரன் கோவில் தான் கண்கண்ட இடம்.
இங்கு போய் வழிபாடு பண்ணிவிட்டு அந்தப் புற்று மண்ணை கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு மஞ்சள் துணியில் முடிஞ்சி நிலைவாசலில் கட்டித் தொங்க விட்டால் போதும். அதற்குப் பிறகு அந்தப்பக்கமே பாம்பு வராது என்பது நிதர்சனமான உண்மை.
இங்கு கோமதி அம்மன் என்ற பெயரில் அம்பாள் தவம் செய்கிறாள். இந்த ஆடித்தபசு அன்று சங்கரன்கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. அப்படி போக முடியாதவர்கள் நம் வீட்டுப் பக்கத்திலேயே இருக்கிற நாராயணர் மற்றும் சிவபெருமான் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.
சங்கரன் கோவிலில் சிவபெருமானும், நாராயணரும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சித் தருகிறார். இதேபோல காட்சி தரும் பல கோவில்கள் உள்ளன. அங்கு சென்றும் வழிபடலாம்.
வீட்டுக்கு அருகில் உள்ள அம்பாள் கோவிலுக்குச் சென்று வழிபடுங்க. குங்கும அர்ச்சனை செய்து மலர்கள் கொண்டு வழிபடுங்க. அன்று பௌர்ணமி என்பதால் இந்த நாளில் ஆடித்தபசுடன் சேர்ந்து வருவதால் சத்யநாராயணர் பூஜை ரொம்பவே விசேஷமானது. இப்படி செய்வதால் நாராயணரோட அனுக்கிரகத்தையும் நாம் பெறலாம்.
நல்ல ஆற்றலையும் நம் வீட்டில் ஏற்படுத்தித் தருகின்றன. பௌர்ணமி அன்று சித்தர்கள் எல்லோரும் இணைந்து வழிபாடு செய்கிற நாள். அதனால் தான் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் விசேஷமாக உள்ளது. இந்த நாளில் ஹயக்ரீவர் வழிபாடும் மிகவும் விசேஷமானது. கலைகளுக்கு எல்லாம் மூத்த தெய்வம் இவர் தான்.
சங்கரன் கோவிலில் இன்று (31.07.2023) அன்று ஆடித்தபசு கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 21.7.2023 முதல் 1.8.2023 வரை ஆடித்தபசு நடைபெறுகிறது.