வருகிற ஆடி அமாவாசை தான் ரொம்ப ரொம்ப முக்கியம்… ஏன்னு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க…

Published:

ஆடி மாதம் இந்த ஆண்டு 2 தடவை வந்துள்ளது. ஆடி முதல் தேதியும், கடைசி தேதியும் வருகிறது. மாதத்தின் முதல் நாளில் அமாவாசையோ, பௌர்ணமியோ வந்தால் அதன் இறுதி நாள்களிலும் வருகிறது. வேதத்தில் இத்தகைய மாதத்தை விஷ மாதம் அல்லது மழை மாதம் என்பர்.

வேதத்தின் கூற்றுப்படி மாதத்தில் 2 தடவை வந்தால் கடைசியில் வரும் திதி தான் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்கிறது. இதைத்தான் பஞ்சாங்கக் குறிப்புகளும் சொல்கிறது.

Aadi Amavasai
Aadi Amavasai

அந்த வகையில் 16.8.2023 அன்று வரக்கூடிய அமாவாசை தான் மிகுந்த சக்தி வாய்ந்தது. அதனால் தவற விடாமல் இறந்த முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடுவது, திதி கொடுப்பதைக் கட்டாயம் செய்ய வேண்டும். அது வருடம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். விரய செலவுகள் இருக்காது.

தெய்வ வழிபாடுகளுக்கு ஒரு முறையும், முன்னோர் வழிபாடுகளுக்கு ஒரு முறையும் கடைபிடிப்பது வழக்கம். ராமேஸ்வரத்தில் ஆடி முதல் நாளில் அமாவாசை கொண்டாடப்படுகிறது. அடுத்து திருச்செந்தூர். இங்கு ஆடி 31ம் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. அந்தந்தக் கோவில்களில் உள்ள பஞ்சாங்கக் குறிப்புகளின்படி இந்தத் தேதி மாறுகிறது.

2 அமாவாசைகளிலும் திதி கொடுப்பது அதி விசேஷமான பலன்களைத் தரும். அதனால் ஒன்று போதும். மற்றொன்று வேண்டாம் என்று நினைக்காதீர்கள். நம் முன்னோர்களுக்காக இந்த ரெண்டு நாளை ஒதுக்குவதில் தவறில்லை. வெளியூரில் உள்ளவர்கள் எந்தக் கோவிலுக்குச் செல்கிறீர்களோ அங்கேயே சென்று கடைபிடியுங்கள். கோவிலிலும் போய் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.

ஆடி அமாவாசைக்கு தாய், தந்தையர் என யாரும் இல்லாத ஆண்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதில் எள்ளும், தண்ணீரும் இறைப்பது தான் முக்கியமான விஷயம். அந்தத் தண்ணீரைக் கண்ணில் ஒற்றி சூரியபகவானை வேண்டிக் கொண்டு எங்களது முன்னோர்களின் ஆசி எனக்கும், குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும்.

Aadi 31
Aadi 31

வம்சம் தழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். மதியம் இலை போட்டு படையல் பண்ண வேண்டும். 16.8.2023 அன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து முடித்து விட வேண்டும். மதியம் இலை போட்டு படைப்பவர்கள் ராகு, எம கண்டம் இல்லாத நேரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முன்னோர்களுக்கு எவையெல்லாம் பிடிக்குமோ அதை படையலாகச் செய்து வையுங்கள். யாருக்காவது ரெண்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். இதுதான் அமாவாசையில் நாம் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்.

ரொம்ப ஏழையாக இருக்கிறவர்கள் ஒரு கைபிடி குருணையாவது கொண்டு போய் எறும்பு புற்றில் போட்டு விடுங்கள். மாலையில் நெய் விளக்கு போட்டு வழிபடுங்கள். முன்னோர்களை நினைத்து வழிபடுவதன் மூலம் அவர்களது பரிபூரண ஆசி நமக்குக் கிடைக்கும்.

மேலும் உங்களுக்காக...