வாழ்க்கையில் உங்களை ஏமாற்ற தேர்வுகள் வருகிறது…ஜெயிக்க இதோ வழிகள்…!

Published:

வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாம பல பேர் ஏதோ வந்தோம் போனோம்னு வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு வாழ்க்கையை ரசித்து வாழத் தெரிவதில்லை. கொஞ்சம் தோல்வி வந்தாலே துவண்டு விழுந்துடறாங்க.

அதே போல கொஞ்சம் வெற்றி வந்தாலும் செமத்தனமா தாங்க முடியாத அளவுக்கு ஆட்டம் போடுறாங்க. சரிப்பா அப்படின்னா எப்படி தான் வாழ்றதுன்னு கேட்பவர்களுக்காக இந்த தகவல்கள் பயன்படக்கூடும். இனி அந்த சூப்பரான தகவல்கள்…

நண்பர்களை ரொம்பவும் நம்பி விடாதீர்கள்… எதிரிகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்..!

சில நேரங்களில் நண்பர்கள் நமக்கே பிடிக்காமல் இருந்து விடுவார்கள். அது நம்மை மிகவும் பாதிக்கும். அதேபோல் உங்களுக்கு எதாவது ஒரு விஷயம் நடக்கணும்னா எதிரிகளாக இருந்தாலும் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

அதிகம் பேசாதே… செய்து காட்டு

success boy
success boy

வாய்ச்சவடால் கூடாது. செயல்முறை தான் நாம் யார் என்பதை இந்த உலகிற்குக் காட்டும். செயல் எப்படி உள்ளதோ அதைப் பொறுத்துத் தான் நம்மை மதிப்பார்கள். எல்லோரது முன்பும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து காட்ட வேண்டும்.

நேர்மறையான உதவியாளராக

உங்களைக் காட்டுங்க

நாம ஒரு தப்பு செய்துக்கிட்டா நல்லது செய்ய ஆரம்பிப்பாங்க. அப்படி செய்ததும் காலப்போக்கில் அவர்கள் முதலில் செய்த தப்பை மறந்துடுவாங்க. இப்படிப்பட்ட நண்பர்களிடம் கவனமா இருங்க. இப்படித்தான் பலபேரு நம்மை ஏமாற்றிக்கிட்டு இருக்காங்க. அதனால இப்படிப்பட்ட நண்பர்களை நம்பாதீங்க.

எதிரியை முழுமையாக வீழ்த்துவது

சிலநேரங்களில் நாம எதிரியைப் பார்க்கும்போது ஐயோ பாவம்னு நமக்குத் தோணும். சில நேரங்களில் கெஞ்சுவாங்க. அந்த நேரத்தில் நாம விட்டுரலாம்னு தோணும்.

இப்படி விட்டுவிடுறது தான் நம்மோட பெரிய முட்டாள்தனம். இன்னிக்கு நம்ம கிட்ட தோத்தவங்க ஏதாவது ஒரு நேரம் வரும்போது நிச்சயமா உங்களைப் பழிவாங்கணும்னு தான் நினைப்பாங்க.

அதனால உங்களோட எதிரி யாராக இருந்தாலும் சரி. அவங்கள முழுசா தோற்கடிச்சிருங்க.

மற்றவர் கணிக்க முடியாதபடி வாழ்தல்

இவங்க இதைத் தான் அடுத்து செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சிருச்சுன்னா நம்மளை யாருமே மதிக்க மாட்டாங்க. அதுவே அடுத்தது நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு தெரியலன்னா உங்களை எல்லாரும் கவனிச்சிக்கிட்டே இருப்பாங்க.

அடுத்து என்ன செய்யப்போறதுன்னு தெரிஞ்சிக்கிட்டுன்னா நம்மளோட எதிரி அதைத் தெரிஞ்சிக்கிட்டு சுலபமாகத் தோற்கடிச்சிருவாங்க. அதனால எப்பவுமே மத்தவங்களால கணிக்க முடியாதபடி செயல்படுங்க.

பலம் அறிந்து பகைக் கொளல்

மற்றவர்களைப் பகைத்துக் கொள்ளும் முன் அவர்களது பலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். நாம சில நேரம் நம்ம தான் மிகப்பெரிய ஆளு. மத்தவங்களால நம்ம என்ன பண்ண முடியும்னு நினைப்போம். ஆனால் வலிமையான ஆளுக்கிட்ட நாம மாட்டிக்கிட்டோம்னா பிரச்சனை நமக்குத் தான்.

அதனால எல்லாரும் நமக்குக் கீழே தான்னு நினைக்கக்கூடாது. அவங்க வலிமையானவங்கன்னு தெரிஞ்சா அவங்கக்கிட்ட வீரத்தைக் காட்டாம நாசூக்கா நடந்துக்கிடறதுதான் நல்லது.

உன்னை நீ உருவாக்கு

success 2
success 2

சில நேரம் நம்மை சுற்றி இருப்பவர்களே நம்மை இவன் சரியான படிப்பாளி. ரொம்ப நல்லவன். இவன் ரொம்ப சீன் போடுறான்னு நம்மை புஷ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இதை வச்சிக்கிட்டு நாமளும் அதையே நம்பிடுறோம்.

அதனால நாமளும் அப்படியே மாறணும்னு தோணும். சிறு பிள்ளைகளை சமத்து சமத்துன்னு சொல்லும்போது அதற்கும் அப்படியே நடக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. மற்றவங்களுக்காக நம்மை நாம் வடிவமைக்கக்கூடாது.

நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்க விரும்புகிறீர்களோ அவ்வாறே உங்களை வடிவமையுங்கள். அதற்கான வழிகளை நாம் தான் உருவாக்க வேண்டும். அதை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இவன் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன்கறது காமிச்சிக்கிட்டே இருக்கணும்.

உங்கள் கஷ்டங்களை வெளியேக் காட்டாதீர்

நான் இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னாடி வந்தேன். நான் இதெல்லாம் கடந்து வந்தேன்னு சொல்றதால மத்தவங்களுக்கு நம்ம மேல ஒரு பரிதாபம் தான் ஏற்படும். நம்மை யாருமே பவர்ஃபுல் நபராக பார்க்கவே மாட்டாங்க.

அதுவே நீங்க உங்க கஷ்டத்தை வெளிக்காட்டாம நீங்க செஞ்ச விஷயத்தை மட்டும் காட்டும்போது இவ்வளவு பெரிய விஷயத்தையே இவரு ரொம்ப சுலபமா செஞ்சிட்டாரே.

இவருக்கு உண்மையாகவே பெரிய திறமைகள்லாம் இருக்குன்னு உங்களை ஒவ்வொருவரும் கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க.

உங்களை ஏமாற்றத் தேர்வுகள்

உங்களை ஏமாற்றுவதற்குத் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. உங்கக்கிட்ட ஒருத்தர் வந்து இந்த ரெண்டு புடவையில எது நல்லாருக்குன்னு கேட்டா, நம்ம கிட்ட இவங்க வந்துட்டாங்களே கண்டிப்பா ரெண்டுல ஒண்ணத் தேர்ந்தெடுக்கணும்னு தான் நினைப்போம்.

கொண்டு வந்த ரெண்டுமே அவங்களுக்குப் பிடிச்ச புடவைகள் தான். அதுல எந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்கு லாபம் தான்.

உங்கக்கிட்ட வந்து கேட்கும்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்? நம்மகிட்ட வந்து கேக்குறாங்களேன்னு ஒரு சந்தோஷம் வரும்.

இப்படி தான் பலரும் நம்மை ஏமாற்றுறாங்க. உங்க கண்ணு முன்னாலேயே நிறைய ஆப்ஷன்ஸ் கொடுத்து செலக்ட் பண்ணச் சொல்றாங்கன்னு நாம நினைப்போம்.

ஆனா நாம செலக்ட் பண்ற எல்லா ஆப்ஷன்லயுமே அவங்களுக்கு லாபம் தான் இருக்கும். இதுக்கு உதாரணமா கேட்பரிஸ் சாக்லெட்டைச் சொல்லலாம். இதுல நிறைய வெரைட்டீஸ் இருக்கு.

அதுல நீங்க எதை எடுத்தாலும் அந்தக் கம்பெனிக்கு லாபம் தான். இதை மாதிரி தான் நல்ல விஷயங்களுக்கு நம்மகிட்ட ஆப்ஷன்ஸ் கொடுத்து நம்மை ஏமாற்றிக்கிட்டே இருப்பாங்க.

நேரத்தை உணர்ந்து செயல்படுங்க

10 steps for success
10 steps for success

நிறைய நேரம் இருக்கு. எதைத் தொட்டாலும் பிரச்சனைகள் தான் வருது. அந்த மாதிரி நேரத்துல நாம முயற்சி செய்யாம அமைதியா இருக்குறது தான் நல்லது. பொறுமையாகவும், பதட்டமில்லாமலும் நடக்க வேண்டும். இது ரொம்பவே பெரிய விஷயம்தான்.

ஆனா அந்த மாதிரி நேரத்துல உங்கள நீங்களே பத்திரமா பார்த்துக்கிடுங்க. என்ன தான் நம்மளை சுற்றி நடக்குது? என்ன தான் பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு. உங்களுக்குன்னு சரியான நேரம் வரும்போது கற்ற வித்தைகளைக் கொண்டு ஜெயித்துக் காட்ட வேண்டும்.

ஆனால் இந்த மாதிரி கஷ்டமான சூழல்ல இருக்கும்போது கொஞ்சமாவது பொறுமையா இருக்குறதுதான் நல்லது.

நம்ம மேல இந்த விதிகளை எல்லாம் யாராவது பயன்படுத்தினாங்கன்னா இந்த விதிகளை எல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டு அவங்கக்கிட்ட இருந்து தப்பிக்கணும். இதைத் தெரிஞ்சிக்கிட்டா வாழ்க்கையில இன்னும் நாம கவனமாக இருக்கலாம்.

நன்றி

இது 48 லாஸ் ஆப் பவர் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

 

 

 

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment