இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் மளிகை பொருட்கள் விலை ஏற்றம்!..

Published:

நடுத்தர ஏழை எளிய மக்களின் மாத பட்ஜெட்டில் எப்போதுமே மளிகை பொருட்களுக்கு தான் முதலிடம் கொடுப்பார்கள். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி சமையல் அறையில் இருப்பு வைத்தாலே இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும். அதற்கு காரணம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மளிகை பொருட்கள் இருப்பதுதான்.

ஆனால் இப்போது நடுத்தர ஏழை எளிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக கடந்த ஒரு மாதமாக மளிகை பொருட்கள் விலை கிடு கிடுவென கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதாவது கடந்த மாதம் 26 கிலோ இட்லி அரிசி மூட்டை 1100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த மாதம் 1350 ரூபாய் அதாவது ஒரு மாதத்தில் 250 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி மே மாதம் 30 கிலோ 3200 இப்போது ஜூன் மாதம் 3400, மே மாதம் பூண்டு விலை கிலோவுக்கு 60 முதல் 150 ரூபாய் ஆனால் இப்போது ஜூன் மாதம் பூண்டு விலை கிலோவுக்கு 100 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மே மாதம் துவரம் பருப்பு கிலோ 118 ரூபாய் இப்போது ஜூன் மாதம் 160 ரூபாய், தரமான புளி விலை மே மாதம் 130 ரூபாய் ஜூன் மாதம் 200 ரூபாய் அதாவது ஒரு மாதத்தில் மட்டும் மளிகை பொருட்கள் விலை 10% முதல் 20% வரை உயர்ந்துள்ளது.

அதுவே சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த விலை ஏற்றதால் 30 முதல் 40 சதவீதம் வரை இருக்கிறது. விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன என பார்க்கும்போது தமிழகத்திற்கு தேவையான பெரும்பாலான மளிகை பொருட்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

ஆனால் உக்ரேனில் தொடர்ந்து போர் நீடிப்பதால் அந்த மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்வதால் ஆந்திரா,மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய மளிகை பொருட்கள் வரத்து குறைவாக இருப்பதை இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் எனவும், வரக்கூடிய நாட்களிலும் மளிகை பொருட்கள் விலையேற்றும் இருக்கும் என்றும் கூறுகின்றனர் சென்னை கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத்தினர்.

மளிகை பொருட்கள் விலையேற்றத்தால் சிலரை விற்பனை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒதுக்கும் பட்ஜெட்டில் கூடுதலான தொகையை ஒதுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் சில்லறை விற்பனையில் நஷ்டமே ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.

யுபிஐ இருக்கா அப்போ ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி!..

மத்திய மாநில அரசுகளுக்கு பட்ஜெட் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு நடுத்தர குடும்பங்களுக்கும் தங்களுடைய பட்ஜெட்டில் மளிகை பொருட்களுக்கான ஒரு தொகையை ஒதுக்குவதும் முக்கியம். ஆனால் இப்போது மளிகை பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய இல்லத்தரசிகள் செய்வது அறியாது அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் உங்களுக்காக...