யுபிஐ இருக்கா அப்போ ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி!

Published:

மக்கள் மத்தியில் தற்போது டிஜிட்டல் முறையில் பல பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. ரொக்க பரிவர்த்தனை காலப்போக்கில் மறைந்து விடும் என்று சொல்லும் அளவிற்கு தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகிவிட்டது.

பெட்டிக்கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்தும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்கின்றன. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி டிஜிட்டல் பரிமார்த்தனை செய்வதை விட யுபிஐ செயலி மூலமாக பரிவர்த்தனை செய்வது மக்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது.

யுபிஐ செயலியை நெட் பேங்கிங் உடன் ஒப்பிடும்போது யுபிஐ மூலமாக பணம் அனுப்புவது மிகவும் எளிதான ஒன்றாகவே பார்க்க முடிகிறது. மக்களிடம் யுபிஐ பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் ஏடிஎம்களிலும் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கி முதல் முறையாக யுபிஐ மூலமாக தங்களது வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை எடுக்கலாம்.

வெளிநாட்டுகளில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்!

ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் அதன் படி பார்த்தால் பத்தாயிரம் வரை யுபிஐ பயன்படுத்தி எடுக்க முடியும். அதை உங்கள் யூபிஐ செயலின் மூலமாக ஸ்கேன் செய்ய வேண்டும். தற்போது யுபிஐ ரகசிய எண்ணை மொபைலில் டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் உங்களுக்காக...