சுந்தர் பிச்சையின் அதிர்ச்சி அறிவிப்பு.. உலகையே மாற்றியமைக்கும் வேற லெவல் அப்டேட்!

By Velmurugan

Published:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கூகுள் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிவிப்பு பற்றி இந்த செய்தி தொகுப்பு பார்க்கலாம் .

பழைய நிகழ்வுகள் கழிந்து புதிய அப்டேட்கள் வருவது தொழில்நுட்ப உலகில் ஒரு தினசரி நிகழ்வு. அப்படி புதிய வரவாக இணையத்தை கலக்குகிறது ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

மனிதனைப் போன்று இயந்திரத்தை சிந்தித்து செயல்பட செய்யும் ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பம் உலகை ஆட்டி படைக்கப் போகிறது என்பது துறை சார்ந்த வல்லுநர்களின் பேச்சும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவில் முதியவற்றை கொண்டவந்து ஆச்சரியப்படுத்துவதில் தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது .அப்படி ஓபன் எ ஐ நிறுவனம் உருவாக்கிய சாட் ஜிபிடி செயலியை சமீபத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சாட் பாட் வடிவில் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலை கொடுக்கிறது. இணைய உலகில் கூகுளின் கில்லர் ஆக அதாவது கோகுல் சாம்ராஜ்ஜியத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளதை என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது .

உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு… இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 3 விருதுகள்…

இந்த போட்டியை சமாளிக்க தற்போழுது போட்டியில் இறங்கி இருக்கும் கூகுள் நிறுவனம் சாட் பாட் வடிவிலான வார்டு சாட் தளத்தை அறிமுகம் செய்தது, அமெரிக்கா பிரிட்டன் கேட்ட சில இடங்களில் கிடைக்கப்பெற்ற வார்டு சாட் சேவை 180 நாடுகளில் விரிவடைகிறது என அறிவித்துள்ளது கூகுள் .

செயற்கை நுண்ணறிவு குறித்து கூகுளின் டெக்ஸ் சார்ந்த எதிர்கால முன்னேற்றம் குறித்த கூகுள் ஐவோ மாநாட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதன் சிஇஓ சுந்தர் பிச்சை. பார்ட் சேவை google மேப் மெயில் என பல தளங்களில் விரிவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

புகைப்படங்களை படிக்கும் வகையிலும் வசதிகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது.ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதன் விவரங்களை கேட்டாள் வார்டு சாட் பாட் அதன் விரிவான விளக்கமளிக்கிறது. உதாரணமாக ஒரு நாயின் புகைப்படத்தை பதிவிட்டால் அது என்ன வகையை சார்ந்தது என்பதை எல்லாம் கூறும் என தெரிவிக்கப்படுகிறது .

மேலும் gmail-ல் நீங்கள் எழுத விரும்புவது என்ன என்று சொன்னால் போதும் அதுவே வார்த்தைகளை கோர்த்து தகவலை நிறைவு செய்துவிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு சேவைகள் எல்லாம் களிப்பூட்டும் விதமாக இருந்தாலும் மோசமானவர்கள் கையில் இருந்தால் ஆபத்தும் இருக்கிறது என்ற எச்சரிக்கையும் கூகுள் முன்வைக்கிறது.