இனி தியேட்டருக்கு போக வேண்டாம், மேட்ச் பார்க்க கிரௌண்டுக்கு போக வேண்டாம்.. வந்துவிட்டது ஜியோ தியேட்டர் VR ஹெட்செட்..!

Published:

டெக்னாலஜி வளர வளர பொதுமக்களுக்கு அதிகப்படியான வசதிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் தற்போது வீட்டில் இருந்து கொண்டே கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் செய்து முடிக்கும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் என்னதான் டிவியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் பார்த்த திருப்தி இருக்காது என்றும் அதேபோல் என்னதான் டிவியில் குளோசாக கிரிக்கெட் போட்டியை பார்த்தாலும் நேரில் சென்று பார்த்து அனுபவம் இருக்காது என்றும் பலர் கூறுவது உண்டு.
தற்போது அந்த குறையை ஜியோ நிறுவனத்தின் விஆர் ஹெட்செட் தீர்த்து உள்ளது. ஆம் இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டு நாம் திரைப்படத்தை அல்லது கிரிக்கெட் போட்டியை மொபைலில் பார்த்தால் தியேட்டரில் திரைப்படத்தை பார்த்த அனுபவம் அல்லது கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை பார்த்த பார்க்கும் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

jio headset1 1

ஜியோ தற்போது புதிதாக ஜியோ லைவ் விஆர் ஹெட்செட் என்ற ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. 1300 ரூபாய் மதிப்புள்ள இந்த ஹெட்செட்டில் 3 பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து லென்ஸ்களை நாம் ஏற்ற இறக்கத்தை செய்து கொள்ளலாம். இதனை அடுத்து திரைப்படத்தை அல்லது கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டியையோ குளோசப்பாக 360 டிகிரியில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் இரண்டு லென்ஸ்கள் உள்ளன இதை கட்டுப்படுத்தவும் இரண்டு பட்டன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிகவும் தெளிவாக காண்பதற்காகவும் ஒரு பட்டன் உள்ளது. இதில் உள்ள பட்டனை கிளிக் செய்தால் இந்த ஹெட்செட் ஓப்பன் ஆகும். அதில் நமது மொபைல் போனை வைத்துவிட வேண்டும். அதன் பிறகு அதை மூடிவிட்டு அதற்கு கீழ் உள்ள ஒரு பட்டனை நாம் கிளிக் செய்தால் போதும் மொபைலில் உள்ள காட்சியை நாம் மிகப்பெரிய திரையில் பார்ப்பது போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டியை நாம் பார்க்கலாம்.

மேலும் இந்த ஹெட்செட்டை பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் ஜியோவில் உள்ள ஜியோ இம்மன்ஸ் என்ற செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆனால் இந்த செயலியை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் நம்மிடம் ஒரு ஜியோ சிம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ சிம் இல்லாமல் இது செயலி செயல்படாது. உள்ளே சென்றவுடன் ஜியோ லைவ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை முதலில் செலக்ட் செய்ய வேண்டும். அதன் பிறகு மொபைலில் கிரிக்கெட் போட்டியை பார்த்தால் நாம் நேரில் பார்ப்பது போன்று அல்லது ஒரு மிகப்பெரிய திரையரங்கு திரையில் பார்ப்பது போன்ற அனுபவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்று பல விஆர் ஹெட்செட்டுக்கள் வந்தாலும் தற்போது ஜியோ ஹெட்சைட்டில் மிகச்சிறந்த அனுபவம் இருப்பதாக இதை பயன்படுத்தி அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...