ஒரே நாளில் தமிழ்நாட்டை சேர்ந்த மூவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார். உலக அரங்கில் தமிழர்களுக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளார்கள்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக அளவில் சிறந்த கல்வி சேவை புரிந்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன, இந்த நிகழ்வில் உலகம் எங்கும் இருந்து பல கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கலந்து கொண்டனர்.
உலக தமிழ் சங்க அமைப்பின் சார்பாக இந்த விருதுகளுக்காக இந்தியாவில் இருந்து நான்கு கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.சென்னை மாதவராத்தில் உள்ள ஆலிவ் ஸ்ரீ பள்ளி இந்த விருதுக்காக தீர்மானமாகி இருந்தது.
இதையொட்டி லண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலிவ் ஸ்ரீ பள்ளி சேர்மன் -க்கு இங்கிலாந்து எம்பி ஹாலிவுட் விருதுகளை வழங்கி கௌரவித்தார். உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தலைமை நிர்வாகி அவர்கள் உடனிருந்தனர்.
விருதுகளை பெறும்போது பள்ளியின் தாளாளர் டாக்டர் திருமதி ஜாய்சுக்கும் உடன் இருந்தார் ,முன்னதாக வேலூர் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் ,ஆர் எம் கே கல்வி நிறுவனங்களின் சார்பாக முனிரத்தினம் ஆகியிருக்கும் திறந்த கல்வி சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இளநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் : பல கட்சிகள் ஆதரவு
இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வீரேந்திர ஷர்மா, டேவிட் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பல நாடுகளை சேர்ந்த கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ஒரே நாளில் தமிழகத்திற்கு மூன்று விருதுகள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.