புற்றுநோய் வராமல் தடுக்கும் எதிர்த்து போராடும் சிறந்த உணவுகள் இதுதான்…

Published:

புற்றுநோய் என்பது உடலில் உள்ள சாதாரண செல்களில் மாற்றம் ஏற்பட்டு அசாதாரண வளர்ச்சி அடையும் போது அது ஒரு நோயாக மாறும். ஒரு கட்டியாக ஆரம்பித்து அது மற்ற இடங்களில் பரவுவதே புற்றுநோய் என்பதாகும். லூக்கேமியா எனப்படும் ரத்த புற்று நோயைத் தவிர அனைத்து புற்று நோய்களுக்கும் இது பொருந்தும்.

புற்றுநோய் வருவதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், மோசமான ஊட்டச்சத்து, நச்சுரசாயனங்களுடன் வேலை செய்வது போன்றவற்றால் புற்றுநோய் ஏற்படலாம். இது தவிர உங்கள் குடும்பத்தில் மரபியல் சார்ந்த உறுப்பினர்களுக்கு யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால் அந்த மரபணுவால் புற்றுநோய் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த புற்று நோய் யாருக்கு எந்த நேரத்தில் எப்படி வரும் என்பது கண்டுபிடிக்க இயலாத ஒன்றுதான். ஆனால் நம் உடலை பாதுகாப்பதன் மூலம் புற்றுநோய் வராமல் நம்மளால் தடுக்க முடியும். அப்படி புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக உட்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி விரிவாக இனி காண்போம்.

புற்று நோய்களுக்கான உணவில் அதிக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது ஆகியவை இருக்க வேண்டும். புகையிலை பயன்பாட்டை தவிர்ப்பது, மதுபானங்கள் அருந்தாமல் இருப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வழக்கமான உடற்பயிற்சி, சத்து நிறைந்த ஆகாரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றினால் புற்றுநோயை தடுக்கலாம்.

இது தவிர புற்றுநோயை வராமல் தடுக்கவும் எதிர்த்து போராடவும் சில சிறப்பான பழங்கள், காய்கறிகள், உணவு வகைகள் இருக்கின்றன. பியாக்சான்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி, முட்டைகோஸ், பிரக்கோலி, காலிபிளவர் போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். பச்சை இலை காய்கறிகளான கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவைகளில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட்கள், கிளைக்கோபிட் என்ற புற்றுநோய் செல் பெருக்கத்தை தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

அடுத்து நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பூண்டு புற்று நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பூண்டு ஒரு அற்புதமான நுண்ணுயிர் எதிர்ப்பு சத்துக்களை நமக்கு வழங்குகிறது. இது புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மளை தடுக்கிறது. தக்காளி, புற்றுநோய் தடுப்பு உணவுகளில் சிறப்பான இடத்தை பிடிக்கிறது. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணமான லைகோபின் என்ற சத்து நுரையீரல் மற்றும் வயிற்றுப் புற்று நோயை தடுக்க உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

பெர்ரி வகை பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் பயிட்டோ நூற்றியென்ட்கள் அதிகம் இருக்கின்றது. இந்த பைட்டோ நூற்றியெண்டுகள் புற்று நோய்க்கு எதிரானதாகும். இது தவிர கேரட், பீன்ஸ், லவங்கப்பட்டை, ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், ஆளி விதை, கொழுப்பு நிறைந்த மீன், பச்சை தேயிலை தேநீர், காளான்கள் போன்ற உணவுகளை சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை எதிர்த்து போராட உதவும்.

உணவே மருந்து மருந்தே உணவு என்பது போல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களின் அபாயத்திலிருந்து நம்மை காக்கும். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துவதும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் உங்களுக்காக...