இந்தியாவில் 120 கோடி மக்கள் செல்போன்கள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய உலகில் தகவல் தொடர்பு மட்டும் இன்றி அனைத்து விதமான தேவைகளுக்கும் செல்போன்கள் அத்தியாவசியமானதாக இருக்கின்றன. ஆனால் இதன் முறையற்ற பயன்பாட்டால் நான்கில் மூன்று பேருக்கு நோமோஃபோபியா என்னும் வினோத நோய் இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
சில நிமிடங்கள் செல்போன் கையில் இல்லாவிட்டாலும் ஒரு கையையே இழந்து விட்டதாக பலரும் உணருகிறார்கள். இப்படி உணர்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் நிச்சயம் நோமோ ஃபோபியா என்ற நோயில் சிக்கித் தவிக்கிறீர்கள் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
பொதுவாக கையில் செல்போன் இல்லாத நேரத்தில் ஒருவருக்கு ஏற்படும் பதற்றமும் பயமும் தான் நோமோபோபியா என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக சில அமைப்புகள் அண்மையில் நடத்திய ஆய்வில் நான்கில் மூன்று இந்தியர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே நோமா போபியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் சார்ஜ் குறைவதால் 65 சதவீதம் பேர் மனதளவில் சற்று கவலையாக உணர்வதாகவும் 28% பதற்றம் அடைவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். 87 சதவீதம் பேர் செல்போனை சார்ஜ் போட்டபடியே ஆபத்தான முறையில் பயன்படுத்துவதாகவும், 92% பேர் பவர் சேவிங் மோடில் வைத்து சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
காலையில் செல்போனில் கண்விழித்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை பயன்படுத்துவதாக 40 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர். பேட்டரி லெவல் 20% கீழ் இறங்கும்போது அதிகம் பதற்றம் அடைபவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் என்றும் இந்த ஆய்வு வியப்பூட்டுகிறது.
கல்லூரிகளின் கவுன்சிலிங் தேதி, வகுப்புகள் தொடக்க நாள் குறித்து அதிரடி அறிவிப்பு!
5 வயதுக்குள்ளாகவே செல்போனை பயன்படுத்த தொடங்கிவிடும் குழந்தைகள் எதிர்காலத்தில் தீவிர மனநல பிரச்சினைகளை சந்திப்பார்கள் எனவும் இந்தியாவில் அமெரிக்க தன்னார்வ நிறுவனம் நடத்திய மற்றொரு ஆய்வு கூறுகிறது. குழந்தைகளிடம் சிறிய மாறுபாடு தெரிந்தாலும் கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெறுவது சிறந்தது. மேலும் இதில் ஆண் குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகள் அதிக பாதிப்பை சந்திப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.