கல்லூரிகளின் கவுன்சிலிங் தேதி, வகுப்புகள் தொடக்க நாள் குறித்து அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் மே 29 முதல் தொடங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மாநில உயர்கல்வித் துறையின் ஒரு பிரிவான கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மே 8 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைத் தொடங்கியது மற்றும் மே 22 ஆம் தேதியுடன் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் பதிவுப் பணிகள் முடிவடைந்ததால், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் மே 25ஆம் தேதி வெளியிடப்பட்டு, தகுதிப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வார்டுகள், விளையாட்டு ஒதுக்கீடு போன்ற சிறப்புப் பிரிவுகளின் கீழ் வரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் மே 29 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

“பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் ஜூன் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும்”, பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் விரும்பும் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளைத் தேர்வுசெய்யும் வகையில் இரண்டு சுற்று கவுன்சிலிங் நடைபெறும். பொதுப்பிரிவின் கீழ் வரும் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 12 முதல் 20 வரை நடைபெறும் .

தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகள் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படும் என தகவல் கிடைத்துள்ளது. அடுத்ததாக கவுன்சிலிங் செயல்முறைக்குப் பிறகு, இறுதிப் பட்டியல் கல்லூரியால் தயாரிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு அனுப்பப்படும் என்றும் , முதலாம் ஆண்டுக்கான கல்லூரிகள் ஜூன் 22 முதல்  திறக்கப்படும் .

2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ரூ.150 சர்வீஸ் சார்ஜா? அதிர்ச்சி தகவல்..!

தற்போது மாநிலம் முழுவதும் 163 அரசு, 139 அரசு உதவி பெறும் மற்றும் 633 சுயநிதி கல்லூரிகள் உட்பட 935 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.