2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் 2100 ரூபாய்க்கு இறைச்சி: அதிரடி சலுகை அறிவிப்பு..!

Published:

2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் 2100 ரூபாய்க்கு இறைச்சி வழங்கப்படும் என டெல்லியை சேர்ந்த இறைச்சி கடை ஒன்று அதிரடி சலுகை அறிவிப்பை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்ததால் கோடிக்கணக்கான 2000 ரூபாய் நோட்டு தற்போது வெளியே வருகிறது. 2000 நோட்டுக்களாக பதுக்கி வைத்தவர்கள் அந்த ரூபாயை எப்படியாவது மாற்றினால் போதும் என பல வகைகளில் வெளியே கொண்டு வருகின்றனர்.

பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், நகை கடைகள், ஆன்லைன் ஷாப்பிங் உள்பட பல்வேறு வகைகளில் 2000 நோட்டு தற்போது பழக்கம் ஆகி வருகிறது. கடந்த சில வருடங்களாக 2000 ரூபாய் நோட்டை பார்த்தே இராத பொதுமக்களிடம் தற்போது சர்வசாதாரணமாக 2000 ரூபாய் நோட்டு புழங்கி வருகிறது.

2000 ரூபாய் நோட்டு திரும்பப்பெறும் அறிவிப்பு வெளியானதில் இருந்து அனைத்து வியாபாரிகளுக்கும் வியாபாரம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக நகைக்கடையில் 10 மடங்கு அதிகமாக வியாபாரம் அதிகரித்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டை பதுக்கியவர்கள் நகைகளாக வாங்கி குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த இறைச்சி வியாபாரி ஒருவர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு 2000 ரூபாய் நோட்டை கொடுத்தால் 2100 ரூபாய் மதிப்புள்ள இறைச்சி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த கடைக்கு மூன்று மடங்கு வியாபாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் உங்களுக்காக...