‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை… நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என ஒரு அழகான பழைய பாடலை நாம் கேட்டிருப்போம். பிபி.ஸ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனா உண்மையில் நினைப்பதெல்லாம் நடக்குமா? அப்படி நடக்கவே நடக்காது. அப்படின்னா நடக்குறதுக்கு என்ன செய்யணும்? வாங்க பார்க்கலாம்.
விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், அவை நம்மை பாதிக்காது . உதாரணமாக நான்கு வானெலி நிலையங்கள் நான்கு விதமான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினாலும் நாம் எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கு கேட்கும்.
அது போலவே, தேவையற்ற அலைக்கழிப்பும், பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனித திறமை வெளிபடுகிறது. இது அதிகரிக்கும் போது நமக்கு எல்லாமே தானாக கிடைக்கும்.
எங்கு போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும். தடை ஏற்படின் அதுவும் நன்மைக்கே என்று எண்ணி அமைதி அடைந்தால், அந்த காரியம் உரிய நேரத்தில் தானே கிடைக்கும். முற்றறிவு (Total Consciousness)என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது.
அது தொகுப்பறிவு (Collective Knowledge) அதனால், அந்த இடத்திலிருந்து நாம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும், வேகமும் வரும் போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.