செடிகள் சத்தம் போடுதா ? ஆராய்ச்சியில் அதிர்ச்சி…..

By Velmurugan

Published:

இஸ்ரேல் நாட்டின் டெல் பல்கலையை சேர்ந்த ஆய்வாளர்கள் தாவரங்கள் வெளியிடும் ஒலிகளை பதிவு செய்தனர். இந்த ஒலிகள் மனிதர்கள் பேசும் மொழி அளவிடும் ஒரு சோழ பொறி பொறிகின்ற ஒலி அளவில் இருக்கும் என்றாலும் இவற்றின் அதிர்வெண் மிக அதிகமாக இருப்பதால் மனிதர்களால் கேட்க இயலாது.

தாவரங்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்படும்போது இந்த ஒலிகள் வெளியிடப்படுகின்றன. வௌவால்கள், எலிகள், பூச்சிகள் ஒலிகளைக் கேட்க முடியும். இந்த ஆய்வு தக்காளி, புகையிலை தாவரங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டது.

இதனுடன் கோதுமை, சோளம், சப்பாத்திக்கள்ளி உள்ளிட்ட தாவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சில தாவரங்களில் தண்டு வெட்டப்பட்டது, சிலவற்றுக்கு ஐந்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் ஊற்றப்படவில்லை.

சில தாவரங்கள் எவ்வித தொந்தரவும் செய்யப்படவில்லை .ஒவ்வொரு தாவரத்தில் இருந்தும் பத்து சென்டிமீட்டர் தொலைவில் இருபது முதல் 250 கிலோ ஹெட் ஒளியை உணரக்கூடிய மைக்குகள் வைக்கப்பட்டு ஒலிகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது பெரிய தவறா?

இத்தகைய சூழலில் ஒவ்வொரு தாவரமும் அதற்கு ஏற்படுத்தப்பட்ட இன்னலை பொருத்து வெவ்வேறு விதமான ஒலிகளை எழுப்பினர். இந்த ஆய்வில் இருந்த தாவரங்கள் வெளியிடும் மொழிகளை பதிவு செய்வதன் வாயிலாக அவற்றுக்கு ஏற்படும் துன்பங்களை உணர்ந்து அவற்றை சரி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றன.

 

மேலும் உங்களுக்காக...